Gas Stove Cleaning in Tamil
பொதுவாக அனைவரது வீட்டிலும் அதிகமாக புழங்கக்கூடிய இடம் எதுவென்றால் சமையல் அறைதான். அந்த சமையறையிலும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருள் எதுவென்றால் அடுப்பு தான். முந்தைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போதோ பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்பை தான் பயன்படுத்துகின்றன. அப்படியே அதிகளவு பயன்படுத்தும் கேஸ் அடுப்பில் சமைக்கும் போது அவற்றில் அதிகளவு கறைகள் படிந்துவிடும்.
கறைபடிந்தால் அதனை சுத்தம் செய்வதோ மிகவும் கடினமாக இருக்கும். இனி கவலை வேண்டாம் உங்களுடைய கேஸ் அடுப்பு எவ்வளவு பழையதாக இருந்தாலும், அதை ஒரு நிமிடத்தில் பளிச்சென்று புதியதாக மாற்ற சூப்பரான இரண்டு டிப்ஸினை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
டிப்ஸ்: 1
தேவைப்படும் பொருள்:
- சோடா உப்பு
பயன்படும் முறை:
ஒரு ஸ்பூன் சோடா உப்பை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து கேஸ் அடுப்பின் மீது நன்றாக ஸ்ப்ரே செய்யுங்கள்.
பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை லேசாக தேய்த்து கழுவினால் உங்களுடைய கேஸ் அடுப்பு புதுபோல் மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
டிப்ஸ்: 2
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 3 ஸ்பூன்
- வினிகர் அல்லது லெமன் ஜூஸ் – 3 ஸ்பூன்
- டிஷ்வாசிங் ஜெல் – 1 ஸ்பூன்
- வெந்நீர் – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், வினிகர் அல்லது லெமன் ஜூஸ் மூன்று ஸ்பூன் டிஷ்வாசிங் ஜெல் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
பின் கேஸ் அடுப்பில் இருக்கு ஸ்டாண்ட், பிளேட், பர்னர் ஆகியவற்றில் அந்த அந்த நீரில் போட்டு குறைந்தது 30 நிமிடங்களாவது ஊறவைக்கவும். 30 நிமிடம் களைத்து சாதாரணமாக தேய்த்து கழுவினால் ஸ்டாண்ட், பிளேட், பர்னர் ஆகியவை பளிச்சென்று மாறிவிடும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
அதேபோல் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் ஆகியவற்றை கலந்து கேஸ் அடிப்பின் மீது அப்பளை செய்து 10 நிமிடம் கழித்து அடுப்பை தேய்த்து கழுவினால் அவற்றில் இருக்கும் கறைகளும் அகன்றுவிடும்.
மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸில் ஏதாவது ஒன்றை ட்ரை செய்து பாருங்கள் கண்டிப்பாக நாள் ரிசல் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள கேஸ் அடுப்பை நிமிடத்தில் சுத்தம் செய்ய இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |