கேஸ் அடுப்பை இப்படி சுத்தம் செய்தால் வெறும் 10 நிமிடம் தான் ஆகுமா..! அப்படி என்ன டிப்ஸ்…

Advertisement

Gas Stove Maintenance Tips in Tamil

நாம் தினமும் மூன்று வேலையும் பசிக்கு ஏற்ற மாதிரியான சாப்பாட்டினை சாப்பிட வேண்டும் என்றால்  அதற்கு கட்டாயமாக சமையல் செய்தே ஆக வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பெரும்பாலான பெண்கள் கேஸ் அடுப்பில் தான் சமைக்கிறார்கள். கேஸ் அடுப்பினை பொறுத்தவரை சிலிண்டர் இருந்தால் மட்டுமே தான் அதனை நாம் உபயோகப்படுத்த முடியும். ஏனென்றால் சிலிண்டரில் உள்ள வாயுவின் மூலமாக தான் கேஸ் அடுப்பானது எரிகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கேஸ் அடுப்பில் சமைப்பது என்பது எளிமையாக இருந்தாலும் கூட அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமற்ற ஒரு செயலாகவே இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் கேஸ் அடுப்பினை எப்படி எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேஸ் அடுப்பு சுத்தம் செய்யும் முறை:

ஸ்டேப்- 1

கேஸ் அடுப்பு சுத்தம் செய்ய வேண்டு என்று முடிவு செய்து விட்டால் சமையல் செய்து முடித்தவுடன் கேஸ் அடுப்பை நன்றாக Off செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதில் காணப்படும் கேஸ் பர்னர் மற்றும் கேஸ் ஸ்டாண்டை தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி

அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் பாத்திரம் கழுவும் ஜெல்லை சேர்த்து கேஸ் பர்னர் மற்றும் கேஸ் ஸ்டாண்டை ஊற வைய்யுங்கள்.

ஸ்டேப்- 3

கேஸ் அடுப்பு சுத்தம் செய்ய

இப்போது 1 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் பாத்திரம் கழுவும் ஜெல் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து அந்த ஜெல்லில் ஒரு ஸ்க்ரப்பரை வைத்து நன்றாக தேய்க்கவும்.

இவ்வாறு 5 நிமிடம் வரை தேய்த்து பின்பு சுத்தமான தண்ணீரை கொண்டு மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கடைசியாக சுத்தம் செய்த கேஸ் அடுப்பினை ஒரு காட்டன் துணியினை கொண்டு துடைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக தண்ணீரில் ஊறவைத்துள்ள கேஸ் பர்னர் மற்றும் கேஸ் ஸ்டாண்டை ஒரு பிரஷினால் சுத்தம் தேய்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள கேஸ் பர்னர் மற்றும் கேஸ் ஸ்டாண்டை மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரில் அலசி காய வைத்து விடுங்கள்.

இத்தகைய முறையில் கேஸ் அடுப்பினை சுத்தம் செய்வதன் மூலம்  கேஸ் அடுப்பு முதல் கேஸ் பர்னர் மற்றும் கேஸ் ஸ்டாண்ட் என அனைத்தும் பளிச்சென்றும், சுத்தமாகவும் மாறிவிடும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement