Godhumai Maavu Gulab Jamun Seivathu Eppadi
தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் இப்போதிலிருந்தே பலகாரம் செய்ய ஆரம்பித்து இருப்பார்கள். அந்த வகையில் பெரும்பாலும் தீபாவளி என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது குலோப்ஜாமுன் தான். என்ன தான் தீபாவளி அதிரசம், ரவா உருண்டை, பயிறு உருண்டை, தேங்காய் பறை, சோமோசா என பல வகையான இனிப்பு பலகாரம் செய்து இருந்தாலும் கூட குலோப்ஜாம் இல்லை என்றால் அது முழுமை அடையாது போன்ற உணர்வே காணப்படும். ஆகையால் பெரும்பாலும் குலோப்ஜாம் செய்ய கடைகளில் தான் மாவு வாங்கி செய்வார்கள். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு நீங்கள் கடையில் மாவு வாங்க வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் கோதுமை மாவு மூலம் சுவையான குலோப்ஜாம் எப்படி செய்வது என்பதை தான் பார்க்கப்போகிறோம். அதனால் பதிவை தொடர்ந்து படித்து நீங்களும் கோதுமை மாவு குலோப்ஜாம் செய்யுங்க.
கோதுமை மாவில் குலாப் ஜாமுன் செய்வது எப்படி..?
பொருட்களின் அளவு | செய்முறை விளக்கம் |
1 கப் கோதுமை மாவு | முதலில் அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கோதுமை மாவினை நன்றாக வறுத்துக்கொள்ள தனியாக வைத்து விடுங்கள். |
1 ஸ்பூன் நெய் | |
1 கப் சர்க்கரை | அடுத்து மற்றொரு கடாயில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதனுடன் 3 ஏலக்காய் சேர்த்து நன்றாக பாகு காய்த்து தனியாக வைக்க வேண்டும். |
3 ஏலக்காய் | |
2 ஸ்பூன் பால் | இப்போது வறுத்து வைத்துள்ள மாவுடன் 2 ஸ்பூன் காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக பிசைந்து 15 அப்படியே வைத்து கொள்ள வேண்டும். |
உருண்டை உருட்டுதல் | 15 நிமிடம் கழித்து பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்து விடுங்கள். |
எண்ணெய் தேவையான அளவு | கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு உருட்டி வைத்துள்ள மாவினை அதில் போட்டு பொன் நிறமாக வந்தவுடன் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். |
கோதுமை மாவு குலாப் ஜாமுன் ரெடி | அதன் பிறகு வேக வைத்து எடுத்து வைத்துள்ள உருண்டையை சர்க்கரை பாகில் போட்டு விடுங்கள். பின்பு ஜாமுன் 1/2 மணி நேரம் ஊறிய பிறகு சாப்பிட வேண்டியது தான். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |