நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்வது எப்படி ?

Advertisement

How To Keep Jewellery Safe At Home In Tamil

பெண்கள் அனைவருக்குமே நகைகள் மீது அதிக ஆசை உண்டு. என்ன தான் நிறைய நகைகள் வாங்கி  பீரோக்களில்  இருந்தாலும் ஒரு பன்சன் வரும் போது. தங்களிடம் நகையே இல்லாதது போல் தோன்றும். அது இயற்கையாவே எல்லா பெண்களுக்கும் உரியது. சேரி அப்படி வாங்கி வாங்கி பீரோக்களில் அடுக்கும் நகைகளை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம். நீண்ட நாட்களுக்கு நீங்க வாங்குன நகை புதுசு மாறியே இருக்கணும்னா கீழ சொல்ற இந்த டிப்ஸ்லாம் பாலோ பண்ணுங்க உங்க நகைகள் அப்படியே புதுசு மாறியே இருக்கும்.

தங்க நகைகளை பராமரிக்கும் முறைகள் :

gold mantain tips tamil

  • நீங்கள் ஒரு பங்க்சனுக்கு நகை போட போறீங்கனா ட்ரேசிங்கிளாம் பன்னிட்டு எல்லா மேக்கப்பும் முடிச்சதுக்கு அப்புறமா நகைகளை அணியுங்கள். இப்படி செய்யும்போது. உங்க ட்ரேஸ்ல உள்ள எம்மப்ராய்டிங்ல உங்க நகைகள் மாட்டி சேதமாக இருக்கும்.
  • தங்க நகைகளில் முத்துக்கள் பதித்த நகைகளை வைர நகைகளோடு வைக்க கூடாது. இது நகைகளுடைய தரத்தை பாதிக்கும்.
  • தங்க நகைகளை போட்டு கொண்டு சமைக்கும் இடத்திலோ அல்லது அடுப்பு பக்கத்தில் இருக்க கூடாது. காரணம், நெருப்பிலிருந்து வரும் அனலானது உங்கள் நகைகளின் பாலிஷ் தன்மைகளை குறைத்துவிடும்.
  • நீங்கள் பர்பியூம் பயன்படுத்துறீங்க அல்லது பாடிஸ்ப்ரே யூஸ் பண்றீங்கனா நகைகளை போடுவதற்கு முன்பு அடித்து கொள்ளுங்கள். பர்ப்பியூமில் இருக்கும் கெமிக்கல்ஸ் நகைகளை பாதிக்கும்.
  • நீங்க ஒரு பங்க்சனுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்த முதல் வேலையா நீங்க போட்ருக்க நகைகளை கழட்டி சுத்தமான காட்டன் டவல்களால் துடைத்து பத்திரமாக வைக்க வேண்டும். உங்கள் வேர்வைகள் நகைகளில் படியாமல் இருக்க இப்படி செய்வது நல்லது.
  • நீங்க கையில கோல்ட் கைச்செயின் போட்ருக்கீங்கன்னா செவுரு மற்றும் தரைகளில் உரசாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்களுடை நகையின் எடை மற்றும் தரத்தை குறைக்கும்.
  • வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை இரும்பு லாக்கர் அல்லது பீரோவில் வைப்பது நல்லதல்ல இரும்பில் இருக்கும் உலோகங்கள் வெள்ளி நகைகளை பாதிக்கலாம்.
  • நகைகளை மர பெட்டிக்குள் வைப்பது அதன் தரம் பாதிக்காமல் பாதுகாக்கும். அதே போல் தங்க நகைகள் மற்றும் வெள்ளி, பிளாட்டினம் நகைகளை தனி தனியாக பிரித்து வைக்க வேண்டும். சேர்த்து வைக்கும்போது. ஒவ்வொன்றின் தரமும் குறையும்.

நகைகளை கழுவும் முறைகள் :

நீங்க உங்க கோல்டு நகைகளை கழுவ நினைத்தால்  அது சரி தான். ஆனால் சோப் போட்டு கழுவ நினைத்தால் அது தவறு. இப்படி செய்தால் உங்கள் நகைகளின் பாலிஷ் தன்மை போய்விடும். அதற்கு பதிலாக நீங்கள் பூங்காக்கோட்ட வாங்கி அதனை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அதோடு சேர்த்து நகையையும் ஊறவைக்கவேண்டும்.  அப்போது சிறிது நேரம் கழித்து அதில் நுரைவரும். அப்போது நகையை நன்றாக தேய்த்து ரொம்பவும் அழுத்தம் கொடுக்காமல் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் நகை பளிச்சென்று இருக்கும்.

இந்த மாதிரி தங்கத்தை மட்டும் வாங்கிடாதீங்க.. அப்புறம் நஷ்டம் தான்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement