Gray Hair Dye With Charcoal Powder
வெள்ளை முடி வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த வெள்ளை முடியை நீங்குவதற்கு சந்தையின் நிறைய பொருட்கள் வந்தாலும், அவையெல்லாம் முழுமையான பலவகை கொடுப்பதில்லை. ஆக இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது தான் மிகவும் சிறந்தது. அந்த வகையில் இன்று நாம் நரை முடியை நிரந்தரமாக மாற்ற சார்கோல் பவுடரை பயன்படுத்தி ஹேர் டை தயார் செய்ய போகிறோம். சரி வாங்க அதனை எப்படி செய்யலாம் என்று இப்பொழுது நான் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- கண்டிஷனர் (Conditioner) – இரண்டு டேபிள் ஸ்பூன்
- சார்கோல் பவுடர் – ஒரு ஸ்பூன்
- மருதாணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளை முடியை மறைக்க இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..
செய்முறை:
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தலைக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் (Conditioner) மற்றும் ஒரு ஸ்பூன் சார்கோல் பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
பிறகு அதனுடன் மருதாணி பவுடர் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
அவ்வளவுதான் இப்பொழுது ஹேர் டை தயார், இவற்றை தலையில் எங்கெல்லாம் நரை முடி இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் காத்திருந்து, பின்பு தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தல் போதும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று இரண்டு மாதம் பின்பற்றி வந்தால் நரைமுடி நிரந்தரமாக மறைந்துவிடும்.
இந்த முறையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வரலாம். இருப்பினும் ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நிரந்தரமாக நரை முடி மறைய இந்த ஒரு எண்ணெயை மட்டும் தடவுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |