கிரைண்டர் கிளீனிங் டிப்ஸ் | Grinder Cleaning Tips in Tamil
ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு இட்லி தோசை என்றால் பிடிக்குமா..? ஏன் கேட்கிறேன் என்றால் சிலருக்கு தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனாலேயே பலரும் இட்லி தோசையை விரும்புவதில்லை. ஆனால் மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு என்றால் அது இட்லி தோசை தான். அதனால் தான் இன்றைய நிலையில் நம் அனைவரின் வீடுகளிலும் தினமும் இட்லி தோசை செய்கிறார்கள். அப்படி நாம் தினமும் இட்லி தோசை செய்வதற்கு முக்கிய காரணம் கிரைண்டர் தான். அந்த காலத்தில் ஒரு சில வீடுகளில் தான் கிரைண்டர் இருந்தது.
ஆனால் தற்போது அப்படி இல்லை. அனைவரின் வீடுகளிலும் கிரைண்டர் இருக்கிறது. கிரைண்டர் இல்லையென்றாலும் பலரும் வீட்டில் மாவு அரைத்து அதை விற்பனை செய்கிறார்கள். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி உங்கள் வீட்டில் கிரைண்டரை எப்படி சுத்தம் செய்வீர்கள். ஏனென்றால் பலருக்கும் கிரைண்டரை சுத்தம் செய்வது என்றால் கொஞ்சம் அலுப்பாக இருக்கும். அதனால் இன்று மிகவும் சுலபமாக கிரைண்டரை சுத்தம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
கிரைண்டர் சுத்தம் செய்யும் முறை:
பொதுவாக நாம் எப்போது மாவு அரைத்தாலும் கிரைண்டரை உடனடியாக சுத்தம் செய்து விட வேண்டும். லேட்டாக சுத்தம் செய்யலாம் என்று நினைத்தால், பின் கிரைண்டரை சுத்தம் செய்வது ரொம்ப கஷ்டமாக மாறிவிடும்.
அதனால் பெரிய கிரைண்டராக இருந்தாலும் சரி, அரசு கொடுத்த சின்ன கிரைண்டராக இருந்தாலும் சரி அதை உடனடியாக கழுவி விடுவது நல்லது. அப்போது கிரைண்டர் காயாமல் சுத்தமாக கிளீன் செய்ய முடியும்.
அடுத்த படியாக மாவு அரைத்த உடன் தண்ணீர் ஊற்றி கிரைண்டரை ஓட விட்டு கழுவுங்கள். அப்போது தான் ஈசியாக கழுவ முடியும்.
கிரைண்டர் கழுவும்போதும் இதை மட்டும் கலந்து கழுவி பாருங்க.. கிரைண்டர் பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும் |
கிரைண்டரில் வலுவலுப்பு தன்மை இல்லாமல் இருக்க டிப்ஸ்:
நாம் என்ன தான் கிரைண்டரை சுத்தமாக கழுவினாலும் அதில் மாவு அரைத்த வலுவலுப்பு தன்மை இருக்கும். இப்படி இருந்தால் கிரைண்டர் சீக்கிரமாகவே துருப்பிடித்து விடும்.
அதனால் கிரைண்டரை கழுவிய உடன் 1 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரை கிரைண்டரில் ஊற்றி ஓட விட்டு கழுவுங்கள்.
இதுபோல செய்தால் கிரைண்டரில் இருக்கும் வழவழப்பு தன்மை நீங்கிவிடும். மேலும் கிரைண்டர் துருப்பிடிக்காமல் இருக்க கழுவிய உடன் ஒரு துணியை வைத்து துடைத்து விட வேண்டும்.
கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |