Grinder Cleaning Tips
எல்லோரும் வீட்டிலும் கிரைண்டர் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வீட்டு கிரைண்டரிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. சில வீட்டில் உளுந்து போட்டால் மாவு நிறைய வராது. சிலர் வீட்டில் அரிசி போட்டால் நைசாக அரைக்காது. இன்னும் சிலர் வீட்டில் கிரைண்டர் ஹீட் ஆகும். மாவு அரைப்பதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. இது போன்ற பிரச்சனைக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுதாக படித்து பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
புது கிரைண்டரை சுத்தம் செய்வது எப்படி.?
புதிதாக வாங்கிய கிரைண்டரில் உடனே மாவு அரைக்க முடியாது. ஏனென்றால் அதில் தூசிகளும், சின்ன சின்ன கற்களும் இருக்கும். இதனை நீக்குவதற்கு வாழைத்தண்டை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இப்படி அரைக்கும் போது கிரைண்டரில் உள்ள தூசிகள், கற்கள் போன்றவை வந்துவிடும். இந்த குறிப்பு புது கிரைண்டருக்கு மட்டுமில்லை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய கிரண்டரையும் இப்படி சுத்தம் செய்யலாம்.
உளுந்து மாவு நிறைய வர:
சிலரது வீட்டில் உளுந்து போட்டால் நிறையவே வராது. இதற்கு காரணம் கிரைண்டரில் உள்ள பிளேடை சரியாக வைக்காமல் இருப்பதால் தான். அந்த பிளேடின் கீழ் பக்கம் மற்றும் பக்க வாட்டிலும் இடைவெளி அதிகமாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது. அதனால் கிரைண்டரில் உள்ள வெள்ளை நிற பிளேடின் ஸ்குருவை கழட்டி சரியாக பொறுத்த வேண்டும். இதை தினமும் அட்ஜஸ்ட் பண்ண தேவையில்லை. மாதத்தில் ஒரு முறை சரி செய்தால் போதும்.
இதையும் படியுங்கள் ⇒ அழுக்காக இருக்கும் மிக்சியை புதிதாக மாற்ற இதை Try பண்ணுங்க..! அப்பறம் பாருங்க எப்படி இருக்கும் என்று..!
அடுத்து உளுந்து மாவு அரைக்கும் போது கையை விட்டு கலந்து விட்டாலும் சரியாக செய்ய முடியாது. அதற்கு தோசை கரண்டியை வைத்து கல்லின் அடிப்பகுதி வரைக்கும் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்படி செய்வதினால் அடிப்பகுதியில் இருக்கும் மாவு மேலே வந்து நிறைய மாவு கிடைக்கும்.
கிரைண்டர் சுத்தம் செய்வது:
கிரைண்டரில் மாவு அரைத்த பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிறிதளவு கல் உப்பு சேர்த்து ஒரு சுற்று ஓட விட்டால் கிரைண்டரில் உள்ள பிசுபிசுப்பு தன்மை நீங்கி கழுவதற்கு ஈசியாக இருக்கும். அதன் பிறகு கிரைண்டரை வெளியே எடுத்து நாரை வைத்து தேய்த்தால் ஈசியாக இருக்கும்.
கிரைண்டர் சூடாகுவதற்கு காரணம்:
சிலரது வீட்டில் உள்ள கிரைண்டரில் அரிசியை அரைக்கும் போது சூடாக ஆரம்பித்து விடும். இதற்கு காரணம் மோட்டாரில் உள்ள ஹீட் வெளியேறாமல் இருப்பது தான். கிரைண்டரில் மோட்டார் இருக்கும் பகுதியில் ஓட்டைகள் இருக்கும். அதில் தூசிகள் ஏதும் இருந்தால் ஹீட் வெளியேறாமல் ஹீட் ஆகும். அதனால் அந்த ஓட்டையில் வாரத்திற்கு ஒரு முறை வெறும் பிரஷை வைத்து கிளீன் செய்ய வேண்டும்.
மாவு அரைத்த முடித்ததும் கிரைண்டர் முழுவதும் ஈர துணியை வைத்து துடைத்தால் அதில் உள்ள ஹீட் குறையும். முக்கியமாக கிரைண்டர் பிளக்கை எடுத்து விட்டு சுத்தம் செய்வது நல்லது.
இதையும் படியுங்கள் ⇒ கேஸ் பர்னர் கருத்து போயிருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |