Grinder Rust Removal Tips in Tamil
பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் இட்லி மாவு, தோசை மாவு போன்றவற்றை அரைக்க பயன்படுத்தும் கிரைண்டரை சுத்தம் செய்வது தான் பலருக்கு மிக மிக கடினமான ஒரு வேலையாக இருக்கும். அதிலும் நாம் பயன்படுத்தும் கிரைண்டரில் துரு பிடித்திருந்து அதை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டு விட்டோம் என்றால் அது நமது கிரைண்டரை மிக விரைவில் செயலிழக்க செய்து விடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்கள் கிரைண்டரில் நீண்ட நாட்களாக படிந்துள்ள துருவையும் வெறும் 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Grinder Rust Removal Tips at Home in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள இரண்டு மூன்று பொருட்களை பயன்படுத்தி உங்கள் கிரைண்டரில் நீண்ட நாட்களாக படிந்துள்ள துருவையும் வெறும் 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு பார்க்க போகின்றோம்.
அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- சலவை தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சலவை தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்குமாறு நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வினிகரை சேர்க்கவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் வினிகரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனை உங்கள் கிரைண்டரில் எங்கெல்லாம் துரு உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு ஸ்கிரப்பரை பயன்படுத்தி லேசாக தேய்த்தாலே அதில் உள்ள துரு கறைகள் அனைத்தும் நீங்கி விடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |