ஒரு வாரத்தில் அதிகமாக தலை குளிப்பதால் தலை முடி மெலிதாகி கொண்டே போகிறதா? அப்போ இதை செய்யுங்கள்

Advertisement

முடி வளர்வதற்கு டிப்ஸ்

நண்பர்களே வணக்கம் இன்றைய பெண்கள் அனைவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும். காரணம் அவர்களுக்கு தான் இந்த பிரச்சனையானது அதிகம் உள்ளது. என்ன பிரச்சனை தெரியுமா? அதிகம் தலை குளிப்பதால் அவர்களுக்கு முடியின் வளர்ச்சியும் அதனுடைய அடர்த்தியும் குறைந்து வருகிறது. அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியளிக்கும். வாங்க இப்போது அதற்கான டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

முடி வளர்வதற்கு டிப்ஸ்:

குறிப்பாக இந்து பெண்களுக்கு சொல்லிறேன் என்றால் அவர்கள் தான் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை என்று குளிப்பதோடு மட்டுமில்லாமல் மாதத்திற்கு 5 நாட்கள் குளித்து வருகிறார்கள். அப்படி குளிக்கும் போது அவர்கள் ஒரு நாள் மட்டும் குளித்துவிட்டு தலையில் எண்ணெய் தடவினால் முடி வலிமையாக இருக்கும். ஆனால் அவர்கள் 5 நாட்கள் தொடர்ந்து குளிக்கிறார்கள். அப்போது தலையில் சீப்பு வைத்து சீவ கூட முடியாது. அப்படி சீவினாலும் முடி கையில் வரும்.

சிலருக்கு தலையில் கை வைத்து இழுத்தாலே முடி வரும். அப்படி வருவதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம் என்றும் சொல்லாம். உடலில் தேவையில்லாதது அதிகமாகி தேவையுள்ளது குறைந்துள்ளதால் இது போல் ஆகலாம். ஆகையால் நீங்கள் முடிக்கு சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.  10 நாட்களில் முடி வளர டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

10 நாட்களில் முடி உதிர்வை குறைக்க டிப்ஸ்:

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை = தேவையான அளவு

துளசி = ஒரு கைப்பிடி

தேங்காய் அரை மூடி

டிப்ஸ் -1

முதலில் தேங்காய் அரை முடி துருவி எடுத்துக்கொள்ளவும். துருவிய தேங்காயை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் போதும். அரைத்த பின் அதனை ஒரு துணியில் வடிகட்டி பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

டிப்ஸ் -2

துளசி சாறு

தேங்காயை அரைத்து சாறு எடுத்த பின் ஓரு கைப்பிடி அளவு துளசியை எடுத்துக்கொள்ளவும். துளசி இலைகள் முடியின் வேர்களில் இருக்கக்கூடிய நுண்கிருமிகளை அளிக்கக்கூடிய சக்திகளை கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும்.

டிப்ஸ் -3 hair growth tips in tamil

 

அனைவருக்கும் தெரியும் முருங்கைகீரையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்று. அதிலும் முக்கியமாக தலை முடிக்கு இரும்பு சத்துக்கள் அதிகம் தேவைப்படும் ஆகையால் முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது இரண்டு இலைகளையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அதனையும் தேங்காய் பால் போல் வடிகட்டிக்கொள்ளவும்.

டிப்ஸ் -4

இப்போது மூன்றையும் நன்கு கலந்துகொள்ளவும். கலந்த பின் அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லலெண்ணெய் சேர்த்து கலந்து தலையில் தடவிக்கொள்ளவும். தடவி தலை முழுவதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். நன்கு ஊறவிடவும். குறைந்தது அரை மணி நேரம் ஊறவிடவும். தலையை கொண்டையிட்டு துணியாலோ கவராலோ மூடிவிட்டு ஊறவிட்டு தலையை குளிக்கவும். இதனை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் முடி கொட்டாது.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> அழகு குறிப்புகள்
Advertisement