முடியை நேராக்குவது எப்படி?
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வளவளப்பான கூந்தலை பெறுவதற்கான சில டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பெண்களின் அழகை மேலும் மேம்படுத்துவது கூந்தல் தான். அந்த வகையில் சிலர்க்கு எவ்வளவுதான் தலை சீவினாலும் தலை முடி படிவது மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாகவே சிலருக்கு கூந்தல் உதிர்வதால், ஆங்காங்கே முடி வெடித்து வளவளப்பை இழந்துவிடுகிறது. மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை பார்க்கலாம். உங்கள் முகத்தை போல கூந்தலும் வளவளபாக இருக்க வேண்டுமா? உங்கள் கூந்தலை வளவளப்பாகுவதற்கும், முடி படிவதற்கும் நம் பொதுநலம். காம் பதிவில் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஏழு நாட்களில் தலையில் இருக்கும் பேன், ஈறு போக டிப்ஸ் |
Hair Shining Tips in Tamil:
டிப்ஸ்:1
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 2 முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்ந்து நன்றாக கலக்கி கொண்டு. அதன் பிறகு உங்கள் தலை முடி முழுவதும் அந்த கலவையை தடவி கொண்டு 35 நிமிடம் கழித்து ஒரு மென்மையான ஷாம்புவை கொண்டு தலை குளிக்க வேண்டும்.
இது போல் வாரத்தில் இரண்டு முறைகள் செய்து வருவதால் உங்கள் கூந்தல் வளவளப்பாகவும், மென்மையாகவும் இருக்க இது உதவியாக இருக்கிறது.
டிப்ஸ்:2
அடுத்ததாக கூந்தலை பளபளப்பாக்குவதற்கு,நேராக இருப்பதற்கும் 1 முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காயை துருவி அதில் உள்ள பாலை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலை முடி முழுவதும் தடவி கொண்டு, இதை தலை முடியில் அப்லே செய்த பிறகு 40 நிமிடம் கழித்து தலை முடியை வாஷ் செய்துகொள்ளலாம்.
இதே போல் வாரத்தில் 2 முறை செய்து வருவதால், முடியை பளபளப்பாக்குவதுடன் மட்டுமின்றி தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் முடியை வளர வைக்கவும் பயன்படுகிறது. ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ இருப்பதால் முடியை மென்மையாக்குவதற்கு பயன்படுகிறது.
டிப்ஸ்:3
ஒரு கிண்ணத்தில் சோற்றுக்காற்றை ஜெல் எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கலக்கி கொண்டு, முடியை முதலில் ஒரு மென்மையாக ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்த பிறகு, கடைசியாக இந்த கற்றாழையை தலை முடி முழுவதும் தடவு கொண்டு, தலையை வெறுமையாக அலசவேண்டும்.
இப்படி செய்து வருவதால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறிவிடும்.
டிப்ஸ்:4
அடுத்ததாக சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை எடுத்துக்கொண்டு, முதலில் முடியை ஷாம்பு போட்டு குளித்து கொண்டு, கடைசியாக அந்த கஞ்சி தண்ணீரை தலை முடிகளில் படும்படி சேர்த்து கொண்டு, வெறுமையாக தண்ணீரில் கழுவ வேண்டும்.
இதே போல் வாரத்தில் 2 முறை செய்த்து வந்தால் முடி மென்மையாகவும், நேராகவும் மாறுவதற்கு பயனாக இருக்கிறது.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |