கை கருமை நீங்க
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கைகளில் இருக்கும் கருமைகள் நீங்குவதற்காக ஒரு அருமையான டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். பொதுவாக எல்லா பெண்களும் தன்னுடைய கைகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு சில நபர்களுக்கு கை விரல்களில் இருக்கும் சருமங்கள் கருத்த நிலையில் இருக்கும். இந்த ஒரு டிப்ஸை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும் பலரும் உங்களுடைய கைகளை பார்த்து கேட்பார்கள். மேலும் கை கருமையை எடுக்கும் அந்த ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்க இதை ட்ரை பண்ணுங்க |
கை கருமை நிறம் மாற டிப்ஸ் :1
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு- 3 துளி
- ஜொஜோபா எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
- ரோஸ்மேரி எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
- பாதாம் எண்ணெய் -1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய அளவு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் எலுமிச்சை சாறு,
ஜொஜோபா எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த பிறகு உங்கள் கை மற்றும் கை நகங்கள், கை விரல் மூட்டுகள் போன்ற இடம் முழுவதும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வருவதினால் கைகளில் இருக்கும் கருமைகள் மட்டும் நீங்காமல், கை நகங்கள் ஆரோக்கியமாக வளருவதற்கும் உதவியாக இருக்கிறது. இதை நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு செய்தால் நல்ல பலன்களை தரும். எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்.
கை கருமை நிறம் மாற டிப்ஸ் :2
தேவையான பொருட்கள்:
- Milk Cream- 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 3 துளிகள்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் நாம் எடுத்து வைத்த மில்க் கிரீம், மஞ்சள்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்றாக கலக்கி கொள்ளவும். அதன் பிறகு உங்கள் கைகளில் இருக்கும் கருமை பகுதியில் அந்த கலந்து வைத்த கலவை நன்றாக தேய்த்து 20 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பிறகு கழுவ வேண்டும். இது போல் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே கைகளில் இருக்கும் கருமை நீங்கி கைகள் அழகாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |