வீட்டிற்கு தேவையான பயனுள்ள டிப்ஸ்
வேலைக்கு செல்கின்ற பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளை பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டு வேலைகளை என்ன தான் கவனமாக பார்த்தாலும் சில தவறுகள் நடந்து விடும். என்ன தவறா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா.! சமையல் செய்யும் போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் உணவை வீணாகிவிடுவார்கள். மேலும் எண்ணெய் சேர்ந்த உணவுகளை செய்யும் போது கீழே சிதறி விடும். இதனை கிளீன் செய்வதற்கும் ரொம்ப கஸ்டப்படுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் வீட்டிற்கு உபயோகமுள்ள டிப்ஸை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெங்காயம், பூண்டு கெட்டு போகாமல் இருக்க:
வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி வாங்க மாட்டோம். ஏனென்றால் கிலோ கணக்கில் வாங்கி வைத்து விடுவோம். அதனால் இவை வீணாகாமல் இருப்பதற்கு முதலில் நீங்கள் வாங்கி வந்த உடனே வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
காய வைத்த பிறகு இதனை அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். வெங்காயம், பூண்டை தனித்தனி பாத்திரத்தில் வைக்க வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து வைத்தால் சீக்கிரம் வீணாகிவிடும்.
அது போல உருளைக்கிழங்கும் நீண்ட நாட்கள் இருக்க கூடியது. அதனால் இதனையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
இந்த காய்கறிகளில் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மழை சீசனில் துணிகளில் கரும்புள்ளி திட்டு திட்டாக வராமல் இருக்க எளிய குறிப்பு…!
கண்ணாடி பாத்திரங்கள் பளபளக்க:
கண்ணாடி பாத்திரங்களில் எண்ணெய் சேர்த்து வைத்திருப்பார்கள். அதனை சுத்தம் செய்வதற்கு ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். அதனால் ஈசியா கிளீன் செய்வதற்கு வழிமுறையை பற்றி காண்போம்.
கண்ணாடி பாத்திரங்களை கிளீன் செய்வதற்கு உப்பு, வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கண்ணாடி பாட்டிலில் சேர்த்து குலுக்கி விட வேண்டும். இவை 10 நிமிடம் அப்படியே ஊறட்டும். அதன் பிறகு பாட்டிலை தேய்த்து விட்டு கழுவினால் கண்ணாடி கிளாஸ் பளபளப்பாக இருக்கும்.
எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க:
கிட்சனில் சமைத்த பிறகு எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும். இதனை நீக்குவதற்கு சிறிதளவு தண்ணீரில் கடலை மாவு கலந்து கொள்ளவும். இதனை எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இதனை 15 நிமிடத்திற்கு அப்படியே விட வேண்டும். அதன் பிறகு இந்த இடத்தை நன்றாக தேய்த்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் கெடாமல் சேமித்து வைப்பதற்கான டிப்ஸ்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |