பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
ஹாய் எங்களின் நண்பன் அல்லது தோழி அனைருக்கும் என்னுடைய வணக்கம்..! பொதுவாக அனைவருமே இந்த காலத்திற்கு ஏற்றது போல் நம்மை மாற்றிக்கொண்டு வந்தால் அது நம்முடைய நன்மைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் அதிகளவு முக்கியமாக மாற்றிக்கொள்வது செருப்பு அணிவது தான். செருப்பு அணிவதிலும் என்ன உள்ளது என்று அனைவருமே யோசிப்பார்கள் செருப்பு அணிவது நல்ல பழக்கம் தான் ஆனால் எந்த மாதிரியான செருப்பு அணிய வேண்டும் என்பதில் தான் விஷயமே உள்ளது.
பெண்கள் பொதுவாக அவர்களை அழகாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அதிலும் செருப்பு புதிது புதிதாக போட்டுக்கொள்ள விரும்புவார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்களது கால் அழகாக தெரியும் என்று நினைத்து நிறைய விதமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை போட்டு கொண்டு அவர்களை அழகாக காட்டுவார்கள். அப்படி அணிவ தால் என்ன பிரச்சனை வருகிறது என்று பார்ப்போம் வாங்க..!
மூட்டு வலி ஏன் வருகிறது:
பெண்கள் நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டு கொண்டால் மூட்டு வலி ஏற்படுகிறது. அதனால் பெண்கள் நீண்ட நேரம் செருப்பு அணிய கூடாது. அணிந்தால் மூட்டு வலி ஏற்பட்டு எலும்பு தேய்மானம் ஏற்படும்.
மூட்டுகள் அசையாதவை:
பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டுக்கொள்வதால் அவர்கள் அதிக நேரம் நடக்க வேண்டும். இப்படி நடப்பதால் கால்கள் வளையாது அதேபோல் மூட்டுகளும் வளைவு தன்மையை இழந்து நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தசை சிதைவு நோய்:
நீண்ட நேரம் தசைகளுக்கு வேலைகள் இல்லையென்றால் தசைகளில் பிடிப்பு ஏற்படும். இந்த ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்வதால் தசைகளுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல் இருக்கும் அதனால் தசையில் பிடிப்பு ஏற்பட்டு தசையில் மாற்றம் ஏற்படும்.
கீழ் முதுகு வலி:
பெண்கள் இந்த மாதிரியான செருப்புகள் அணிவதால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டுக் கொள்வதால் நடப்பதற்கு நிற்பதற்கு சுலபமாக இருந்தாலும் அது கீழ் முதுகு வலி ஏற்படும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிக கால் வலி:
உங்களது உடல் எடை முழுவதையும் தாங்குவது கால்கள் தான் ஹீல்ஸ் போட்டுக்கொள்வதால் கால்களுக்கு அதிக வலியை ஏற்படும். அதேபோல் கால்களில் மூட்டுகளில் காயங்களையயும் ஏற்படுத்தும்.
அதனையும் மீறி ஹை ஹீல்ஸ் செருப்பு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதனை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
பைக் வைத்திருப்பவர்கள் இனி பெட்ரோல் விலை பத்தி கவலைப்படாதீங்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |