Home Cleaning Liquid in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என்று வேலை இருந்து கொண்டே இருக்கும். இது மட்டுமில்லாமல் வீட்டையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அபப்டி நாம் என்ன தான் வீட்டையும் வீட்டில் இருக்கும் பொருட்களையும் சுத்தமாக வைத்து கொண்டாலும், அது மீண்டும் கறைபிடித்து அழுக்காகி விடும். அதிலும் அடுப்பை பற்றி சொல்லவே வேண்டாம். நாம் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் அதில் அழுக்கு சேர்ந்து கொண்டு இருக்கும். இப்படி இல்லத்தரசிகளுக்கு இருக்கும் வேலையை சுலபமாக மாற்ற வீட்டிலேயே லிக்விடு செய்து அடுப்பு, பிரிட்ஜ் என்று அனைத்து பொருட்களையும் பளபளப்பாக மாற செய்யலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அடுப்பு, பிரிட்ஜ் என்று அனைத்தும் பளபளப்பாக மாற டிப்ஸ்:
Step -1
முதலில் 4 எலுமிச்சை பழத்தின் தோலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க |
Step -2
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த சாறை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் அதில் ஏதாவது ஒரு Dish Wash Liquid -யை 1/2 கப் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Step -3
பிறகு அதில் 1 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். கடைசியாக அதில் வினிகர் 1 கப் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் லிக்விடு ரெடி..! இப்போது இந்த லிக்விடை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதை கேஸ் அடுப்பு, பிரிட்ஜ், ஜன்னல் கண்ணாடி, கிட்சன் ஸ்லாப் இந்த மாதிரி இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து துடைத்தால் அதில் இருக்கும் அழுக்குகள் அப்படியே வந்துவிடும். மேலும் இந்த லிக்விடை கொண்டு பாத்திரங்களும் கழுவலாம். அனைத்தும் பளபளப்பாக மாறிவிடும்.
வாரத்தில் ஒரு நாள் 5 நிமிடம் செலவிட்டால் கேஸ் புதுசாவே இருக்கும்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |