இந்த டிப்ஸ் மட்டும் தெரிஞ்சா போதும்… இனி புளித்த தோசை மாவை குப்பையில் போட மாட்டீங்க..!

Advertisement

Home Cleaning Tips 

பொதுவாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு நிறைய வேலைகள் இருக்கும். அதிலும் சில பெண்கள் வீட்டில் உள்ள வேலையினையும் முடித்து விட்டு வெளியில் வேலைக்கும் சென்று கொண்டிருப்பார்கள். இதில் சிலருக்கு தெரியாத ஒரு விஷயமும் உள்ளது. அது என்னவென்றால் சிலர் வீட்டில் வேலை பார்ப்பது ஈஸியாக இருக்கும் என்றும் வெளியில் வேலைக்கு செல்வது தான் கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. வீட்டில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவற்றை எளிதில் சுத்தம் செய்து விடவே முடியாது. அதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால் தான் சுத்தமாக வைத்து கொள்ள முடியும். இனி நீங்கள் இது மாதிரி கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால் இன்று வீட்டில் இருக்கும் புளித்த தோசை மாவை வைத்து வீட்டை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க:

எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க

உங்களுடைய வீட்டில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க இனி கடையில் காசு கொடுத்து Liquid வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக Liquid வீட்டில் தயார் செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பொருட்கள் தேவை:

  • தோசை மாவு- சிறிதளவு 
  • கம்போர்ட்- 1 ஸ்பூன் 
  • ஷாம்பு- 1 ஸ்பூன் 

Cleaning Tips👇👇 வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..

 சுத்தம் செய்தல்:

முதலில் ஒரு பவுலில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு புளித்த தோசை மாவு சேர்த்து 2 நிமிடம் கரைய விடுங்கள்.

2 நிமிடம் கழித்த பிறகு அந்த பவுலில் புளித்த தோசை தண்ணீர் மட்டுமே மேலே வந்து இருக்கும். அதனால் அந்த தோசை மாவு தண்ணீர் மட்டும் வடிகட்டி மற்றொரு பவுலில் வைத்து கொள்ளுங்கள்.

இப்போது பவுலில் உள்ள புளித்த தோசை மாவு தண்ணீருடன் 1 ஸ்பூன் ஷாம்பு மற்றும் துணிக்கு பயன்படுத்தும் கம்போர்ட் சேர்த்து ஒரு 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் வீட்டை சுத்தம் செய்வதற்கு புளித்த தோசை மாவு Liquid தயார்.

தயார் செய்து வைத்துள்ள Liquid வைத்து வீட்டின் தரைகளில் படிந்துள்ள எண்ணெய் பிசிபிசுப்பு, அழுக்கு ஆகிய இடங்களில் தெளித்து விட்டு நன்றாக துடைத்து விட்டு மீண்டும் ஒரு முறை சுத்தமாக துடைத்தால் போதும் வீடும் சுத்தம் ஆகிவிடும் வேலையும் எளிமையாக முடிந்து விடும்.

மேலும் இந்த Liquid-ஐ பயன்படுத்தி வீட்டு கிட்சன், சிங்க் ஆகிய இடங்களையும் எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம்.

Cleaning Tips👇👇 வீட்டில் உள்ள மிக்சி எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement