Home Floor Cleaning Ideas
பொதுவாக பெண்கள் தான் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் தரையை சுத்தம் செய்தாலும் அதில் உள்ள அழுக்குகள் போகவில்லை என்று கவலைப்படுவார்கள். அதிலும் சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் சொல்லவே வேண்டாம் பென்சில் கறை, பேனா கறை போன்றவை இருக்கும். அதை என்ன தான் வைத்து தேய்த்தாலும் அந்த கறைகள் நீங்காது. அந்த கறைகள் எல்லாம் நீங்கி தரை பளிச்சென்று வைப்பதற்கு சில ஐடியாவை பார்ப்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Home Floor Cleaning:
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி, சிறிதளவு பல் துலக்கும் பேஸ்ட் -ஐ 3 டம்ளர் தண்ணீரில் கலந்து விடவும். இந்த தண்ணீரை வீட்டின் தரை முழுவதும் தெளித்து விடவும்.
சிமெண்ட் தரையாக இருந்தால் துடைப்பம் வைத்து தேய்த்து விடவும், டைல்ஸ் தரையாக இருந்தால் மாப் வைத்து தேய்க்க வேண்டும். பின் தரையில் உள்ள அழுக்குகள் வந்துவிடும்.
பிறகு ஒரு பக்கெட்டில் வீடு துடைப்பதற்கு தேவையான தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் 2 மூடி டெட்டால் ஊற்றி கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி மறுபடியும் ஒரு முறை மாப் போடவும். இப்படி செய்வதினால் வீட்டு தரை பளிச்சென்று இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க
Bathroom Floor Cleaner:
சமையல் சோடா பாத்ரூம் தரையில் தூவி விடவும். இதை எல்லா இடமும் படுகின்ற மாதிரி தேய்த்து விட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து, பிறகு துடைப்பம் பயன்படுத்தி தேய்த்து விடவும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விடவும்.
எலுமிச்சை:
எலும்பிச்சை சாற்றை பாத்ரூம் தரையில் தெளித்து உடனே தேய்த்து விட்டாலே பளிச்சென்று இருக்கும்.
உப்பு:
உப்பை பாத்ரூம் தரை முழுவதும் போட்டு தேய்த்தால் தரையில் உள்ள மஞ்சள் கறை மற்றும் வழவழப்பு தன்மை நீங்கிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |