Home Remedies for Dry and Dull skin in Winter in Tamil
பொதுவாக பனிக்காலம் அல்லது மழைக்காலம் வந்துவிட்டாலே நமது தோல் வறண்டுபோனது போல காணப்படும். நாமும் அதனை போக்குவதற்கு பல முயற்சியைகளை செய்திருப்போம். ஆனால் அவையாவும் நாம் எண்ணிய அளவிற்கு பயனுள்ளதாக இருந்திருக்காது. ஆனால் அவையாவும் அளிக்காத தீர்வை இந்த பதிவில் கூறியுள்ள சில டிப்ஸ் உங்களுக்கு நிச்சயம் அளிக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Winter Skincare Tips for Dry Skin Home Remedies in Tamil:
டிப்ஸ் – 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உருளைக்கிழங்கு – 1
- தக்காளி – 1
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- கடலைமாவு – 2 டீஸ்பூன்
- அரிசிமாவு – 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள உருளைக்கிழங்கின் தோல்களை நீக்கிவிட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிசேர்த்துக் அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் 1 தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி அதில் உள்ள சாறினை மட்டும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் கடலைமாவு, 2 டீஸ்பூன் அரிசிமாவு மற்றும் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவிக்கொண்டு 1/2 மணிநேரத்திற்கு பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தோல்களில் உள்ள வறட்சி நீங்கி நன்கு பொலிவு பெரும்.
டிப்ஸ் – 2
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
- கடலைமாவு – 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தயிர் – 2 டீஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவிக்கொண்டு 1/2 மணிநேரத்திற்கு பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தோல்களில் உள்ள வறட்சி நீங்கி நன்கு பொலிவு பெரும்.
உடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்
டிப்ஸ் – 3
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- சாதம் – 1/2 கப்
- எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
- கிளிசரின் – 2 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- பால் – 2 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி நன்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவிக்கொண்டு 1/2 மணிநேரத்திற்கு பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தோல்களில் உள்ள வறட்சி நீங்கி நன்கு பொலிவு பெரும்.
உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
டிப்ஸ் – 4
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- காபித்தூள் – 2 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- பல்துலக்கும் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு ஒன்றுடன் ஒன்று சேரும் அளவிற்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவிக்கொண்டு 1/2 மணிநேரத்திற்கு பிறகு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தோல்களில் உள்ள வறட்சி நீங்கி நன்கு பொலிவு பெரும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |