2 நாட்களில் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைய வைப்பதற்கு இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Home Remedies For Foot Crack

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பாதவெடிப்பு பிரச்சனை இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே பாத வெடிப்பு பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் எப்பொழுதும் தண்ணீரிலேயே நின்று வேலை பார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பாதவெடிப்பை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சிறிது காலம் பாத வெடிப்பு மறைந்து மறுபடியும் பாத வெடிப்பு வர ஆரம்பித்து விடும். அதனால் இந்த பாத வெடிப்பை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

பாதங்களை ஊறவைக்கவும்:

பாதங்களை ஊறவைக்கவும்

முதலில் ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கொள்ளவும். பின் அதில் சிறிதளவு உப்பு, எலுமிச்சை பழசாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் அதில் உங்கள் பாதங்களை வைத்து 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் பாதங்களில் பாத வெடிப்பு இருக்கும் பகுதிகளை ஸ்க்ரப் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். பின் உங்கள் பாதங்களை ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

இதுபோல செய்வதால் உங்கள் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பாதங்கள் சுத்தமாக இருக்கும்.

3 நாட்களில் பாதவெடிப்பு முற்றிலும் மறைய இந்த 3 பொருள் மட்டும் போதும்..!

Home Remedies For Foot Crack in Tamil:

katraalai matrum then

  1. தேன் – சிறிதளவு
  2. கற்றாழை ஜெல் – சிறிதளவு

ஒரு கிண்ணத்தில் சமமான அளவில் கற்றாழை ஜெல் மற்றும் தேன் எடுத்து கொள்ளவும். அது இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் உங்கள் பாதங்களில் வெடிப்பு இருக்கும் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த டிப்ஸை நீங்கள் தூங்க செல்வதற்கு முன் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து உங்கள் பாதங்களை கழுவி  கொள்ள வேண்டும்.

தூங்க செல்வதற்கு முன் போட விருப்பம் இல்லையென்றால் பகல் நேரத்தில் 30 நிமிடம் அப்ளை செய்து பின் பாதங்களை கழுவி கொள்ளலாம்.

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறையோ செய்து வந்தால் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இது பாத வெடிப்புகளை முற்றிலுமாக குணப்படுத்தும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement