இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..! | Home Remedies for Grey Hair in Tamil 

Home remedies for grey hair in tamil

இளநரையை போக்க வழிகள் | Permanent Solution for Grey Hair Naturally in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்கும் உள்ள மிக பெரிய பிரச்சனை என்றால் இளம் வயதில் வரக்கூடிய நரைமுடிதான். அதனை எவ்வாறு போக்குவது என்று நாமும் பல முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் அவையாவும் அளிக்காத பலனை இன்றைய பதிவில் கூறக்கூடிய சில குறிப்புகள் பயன் அளிக்கும். அதனால் இந்த பதிவை முழுதாய் படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க அவை என்ன குறிப்புகள் என்று விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Stop Gray Hair at Early Age in Tamil :

 Permanent Solution for Grey Hair Naturally in Tamil

டிப்ஸ் – 1

இளநரை முடியை போக்குவதற்கான முதல் டிப்ஸிற்கு தேவையான பொருட்கள்.

  1. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  2. சீரகம் – 1 டீஸ்பூன் 
  3. இஞ்சி – 1 சிறிய துண்டு
  4. தயிர் – 1 டீஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு 
  6. இந்துப்பு – 1 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்ததும் 1 டம்ளர் மோர் போல கிடைக்கும்.  இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தீர்கள் என்றால் இளநரை விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 2

Permanent solution for grey hair in Tamil

முதலில் 1 கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை எடுத்து நன்கு பொடியாக அரைத்து அதனை ஒரு சிறிய நெல்லிக்காய் அளவிற்கு உருட்டி 1 டம்ளர் மோரில் போட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தீர்கள் என்றால் இளநரை விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 3

1 கைப்பிடி அளவிற்கு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து நன்கு நிழலில் உலர்த்தி, பிறகு  பொடியாக்கி அதனை 1 டீஸ்பூன் எடுத்து தினமும் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் சாப்பிட்டு வருவதன் மூலம் இளநரை விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

இளம் வயதிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது தெரியுமா முக்கிய காரணமே இதுதான்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil