Home Remedy for Bathroom Cleaning in Tamil
பொதுவாக நாம் வாழும் இடத்தை மிகவும் சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல்நலத்திற்கு எந்தவித குறைபாடும் வராது. அதிலும் முக்கியமாக நாம் பயன்படுத்தும் பாத்ரூம்களை சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் அதனை சுத்தமாக பராமரிப்பது நம்மில் பலருக்கும் மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதனால் அதனை எவ்வாறு மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்றால் சில குறிப்புகளை நமது பதிவின் வாயிலாக பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் உங்கள் பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள கறைகளை போக்குவதற்கான உதவும் டிப்ஸினை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Clean Bathroom Door in Tamil:
நமது வீடுகளில் மிக மிக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய இடங்களில் ஒன்று தான் பாத்ரூம் இங்கு தான் அதிக நோய் கிருமிகள் உருவாகும். அதனால் இதனை மிக மிக அதிக கவனத்துடன் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
அதனால் பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள கறைகளை போக்க உதவும் ஒரு ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வினிகர் – 1/4 டம்ளர்
- சலவை தூள் – 1 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை பழசாறு – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர்
- ஸ்பிரே பாட்டில் – 1
பல வருடங்களாக பாத்ரூமில் படிந்துள்ள உப்பு கறையை வெறும் 10 நிமிடத்தில் போக்க தயிர் போதும்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டம்ளர் வினிகர், 1 டீஸ்பூன் சலவை தூள் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடனே 2 டீஸ்பூன் எலுமிச்சை பழசாறு மற்றும் 1 டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு 15 நிமிடம் கழித்து ஒரு ஈரத்துணியை அல்லது Scrubber பயன்படுத்தி துடைத்தீர்கள் என்றால் அனைத்து கறைகளும் நீங்கிவிடும். இதனை ஒருமுறையாவது ட்ரை செய்து பாருங்கள்.
வெறும் 10 நிமிடத்தில் சிங்க் தொட்டியின் அடைப்பை போக்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |