Home Remedy for Mosquito Control in Tamil
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே மழை சரியாக பெய்கின்றதோ இல்லையோ நமது வீட்டிற்கு அழையா விருந்தாளியாக இந்த கொசுக்கள் மட்டும் கண்டிப்பாக வந்துவிடும். அப்படி நமது வீட்டிற்கு வருவதோடு மட்டுமில்லாமல் நம்மையே நறுக்கு நறுக்கு என்று கடித்து நமது இரத்தத்தை நன்கு ருசித்து இரசித்து குடித்து மகிழும். இதனால் நமது பலநாள் இரவுகள் தூக்கம் இல்லாமல் கழிந்திருக்கும். அதனால் நாம் இதனை விரட்டுவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நமக்கு நல்ல பலனை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீடுகளில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Kosu Thollai Neenga Tips in Tamil:
மிகவும் எளிமையான முறையில் நமது வீடுகளில் தொல்லை செய்யும் கொசுக்களை நிரந்தரமாக விரட்ட உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..
முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி பார்க்கலாம்.
- சூடம் – 4
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- ஷாம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 கப்
- ஸ்ப்ரே பாட்டில் – 1
பல வருஷமா பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள உப்பு கரையை 10 நிமிடத்தில் நீக்க தயிர் போதும்
குறிப்பு செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பிலையை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 சூடத்தையும் நன்கு பொடியாக செய்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உங்க வீட்டு பாத்ரூமை ரொம்ப இல்லங்க வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் எப்படி தெரியுமா
பயன்படுத்தும் முறை:
பிறகு இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் வரும் இடங்களில் நன்கு ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் வீட்டில் உள்ள கொசு தொல்லை கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும்.
கொசு தொல்லை முழுமையாக நீங்க வேண்டும் என்றால் மாலை நேரத்தில் கொசுக்கள் வருவதற்க்கு உதவும் ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்து கொள்ளுங்கள். அதேபோல் சிலர் வீட்டில் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி தேங்கி நிற்கும் அவ்வற்றை எல்லாம் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |