Home Cleaning Tips in tamil
பொதுவாக வீட்டை சுத்தம் செய்வது கடினமான வேலையாகும். அதிலும் நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். அவர்கள் வீட்டு வேலைகள் முழுவதும் பெண்கள் செய்து வந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால், காலை எழுந்தவுடன் சமையல் செய்து சாப்பிட்டு வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் எடுத்து வைத்து விட்டு செல்கிறார்கள். இதற்கு இடையில் உள்ள வேலைகளான வீடு துடைப்பது, ஒட்டடை அடிப்பது மற்றும் மெத்தைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்வதற்கு நேரம் இருக்காது. அதற்கு கஷ்டம் என நினைக்கும் வேலையை எளிமையான முறையில் செய்வது என்பதை இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தண்ணீரை வைத்து இப்படியெல்லாம் கூட உடல் எடையை குறைக்கலாமா..? தெரிலைனா தெரிஞ்சுக்கோங்க..!
கடாய் சுத்தம் செய்தல் :
அதிகம் சமைக்க கூடிய பொருளாக கடாய் உள்ளது. கடாயில் உள்ள அதிகப்படியான கறைகளை அகற்றுவதற்கு மிக எளிய முறைகள் ஆகும். முதலில் உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டி கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கின் மேல் சோடாப்பு உப்பை சேர்த்து கொள்ளவும். பிறகு கடாயில் உள்ள கறைகளின் மேல் தேய்த்து கழுவினால், கடாயில் இருக்கும் விடாப்பிடியான கறைகள் நீங்கி கடாய் சுத்தமாகி விடும்.
வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்தல் :
அனைவரும் பயன்படுத்தும் பொருளாக ஷூக்கள் உள்ளது. அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்வது கடினமான வேலையாகும். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஷூக்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வாளியில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி கொள்ளவும். 1 டீஸ்பூன் வாஷிங் சோடா மற்றும் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கரைசலில் வெள்ளை நிற ஷுக்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் துவைப்பதால் ஷுக்கள் சுத்தமாக மாறி வெண்மை நிறத்தில் மாறிவிடும்.
இந்த டிப்ஸ் தெரிஞ்சா உங்க வீடு எப்போதும் சுத்தமாக இருக்கும் | House Cleaning Tips in Tamil
தினசரி காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படுத்தும் பொருளாக கட்டிங் போர்டு உள்ளது. இதனை காய்கறிகள் வெட்டுவதற்கு அதிகம் பயன்படுத்துகிறோம். கட்டிங் போர்டு ஓரங்களில் கறைகள் படிய தொடங்கும் முன்பு கறையை நீக்க வேண்டும். அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி கொள்ளவும். எலுமிச்சை பழத்தின் மேல் உப்பை தடவிக்கொண்டு, இந்த கட்டிங் போர்டு மீது தேய்த்து தண்ணீரை கொண்டு கழுவினால் கட்டிங் போர்டு சுத்தமாக மாறி பளிச்சென்று இருக்கும்.
சுவிட்ச் போர்டு சுத்தம் செய்தல்:
நம் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் கறைகள் வருவது இயல்பானது. அதிலும் சமையல் அறையில் இருக்கும் சுவிட்ச் போர்டில் அதிக கறைகள் இருக்கும். ஏனெனில் சமைக்கும் பொழுது சுவிட்சை அழுத்தும் போது கைகளில் உள்ள அழுக்குகள் அதன் மேல் பட்டு கறைகள் உண்டாகும். அதற்கு முதலில் பல் துலக்கும் மவுத் வாஸ் எடுத்து கொள்ளவும். பிறகு பஞ்சி மற்றும் துணியை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு பஞ்சில் மவுத் வாஷ் ஊற்றி நன்றாக துடைத்து விடவும். பிறகு கடைசியாக துணி வைத்து துடைத்தால் சுவிட்ச் போர்டு பளிச்சென்று மாறிவிடும்.
என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!
செம்பு பாத்திரம் சுத்தம் செய்தல் :
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். நாளடைவில் செம்பு பாத்திரம் பழையது போல காட்சியளிக்கும். இதனை சரி செய்வதற்கு எலுமிச்சை பழம், உப்பு மற்றும் கடலை மாவு இந்த மூன்று பொருளையும் எடுத்து ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இதை பாத்திரத்தின் மேல் தேய்த்து வந்தால் 2 நிமிடத்தில் செம்பு பாத்திரம் பளபளப்பாக மாறிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |