Home Tips To Repel Mosquitoes
பெரும்பாலும் கொசு தொல்லை பல இடங்களில் இருக்கிறது. எந்த சீசனிலும் அழியாத ஒரு உயிரினம் என்றால் அது கொசு தான். அதாவது மழைக் காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி கொசு தொல்லை அதிகமாகவே இருக்கிறது. இந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற பல நோய்கள் நம்மை நெருங்குகிறது.
நாமும் இந்த கொசுகளை விரட்ட கடைகளில் கிடைக்கும் கொசுவத்திகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் கொசுவத்தியில் இரசாயன பொருட்கள் சேர்ப்பதால் அதை நாம் சுவாசிக்கும் போது அதுவே நமக்கு பல நோய்களை ஏற்படுத்துகிறது. அதனால் வீட்டிலேயே எந்தவொரு கெமிக்கலும் சேர்க்காமல் கொசுவத்தி தயார் செய்து கொசுக்களை விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Home Tips To Repel Mosquitoes in Tamil:
- காபி தூள் – 4 ஸ்பூன்
- அந்துருண்டை – 6
ஸ்டேப் -1
வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டுவதற்கு காபித்தூள் மற்றும் அந்துருண்டை மட்டும் போதும். அதற்கு காபி தூள் 4 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -2
அடுத்து அந்துருண்டை 6 எடுத்து அதை தூளாக நுணுக்கி கொள்ள வேண்டும். பின் அந்துருண்டை தூளை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
இதை மட்டும் செய்தால் போதும், கொசு தொல்லை, இனிமேல் இருக்காது.! |
ஸ்டேப் -3
பின் அந்த கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள காபி தூளை போட்டு இரண்டையும் நன்றாக கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் -4
அடுத்து ஒரு சிறிய கண்ணாடி அல்லது ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக இந்த தூளை வைக்க வேண்டும். மீதமுள்ள தூளை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.
ஸ்டேப் -5
பின் ஒரு தீக்குச்சியை அதன் கீழ் பகுதியில் பாதியாக உடைத்து, நாம் எடுத்து வைத்துள்ள தூளின் நடுவில் அதாவது படத்தில் உள்ளது போல வைத்து கொள்ள வேண்டும்.
கொசுக்களை விரட்ட இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றுங்கள்.. கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க 100% ரிசல்ட் கிடைக்கும்..! |
ஸ்டேப் -6
அடுத்து நாம் தூளின் நடுவில் வைத்துள்ள தீக்குச்சியை பற்றவைக்க வேண்டும். கொஞ்ச நேரம் எரியவிட்டு பின் அதை அணைத்து விட வேண்டும்.
அடுத்து அதிலிருந்து புகை வரும். இதனால் உங்கள் வீட்டில் கொசு வரவே வராது. கொசு இருந்தாலும் அது இந்த புகைக்கு பயந்து அது வரவே வராது. மேலும் இந்த இந்த புகையை சுவாசித்தாலும் நமக்கு ஒன்றும் ஆகாது. இதுபோல நீங்களும் ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே..!
இதையும் படியுங்கள் 👇
கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி..? |
உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள் |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |