கேஸ் சிலிண்டர் வெளியாகிறதா என்று தெரிந்து கொள்ள இதை ட்ரை பண்ணுங்க..!

gas likej problem in tamil

கேஸ் வெளியாகிறதா?

நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவலை சொல்வதில் மகிழ்ச்சி காரணம் தாய்மார்கள் சின்ன சின்ன விசயத்திற்கு அதிகம் கவலை கொள்வார்கள். காரணம் அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களுக்கு கடினமாக இருக்கும். அதனை மிகவும் ஈசியாக செய்ய தெரியாமல் கஷ்டப்படுவார்கள். அதனால் அவர்களுக்காக அவர்கள் செய்யும் வேலைகளுக்கு மிகவும் ஈசியாக கற்றுக்கொடுக்க இந்த பதிவு இருக்கும். இதை தெரிந்துகொண்டால் இவ்வளவு நாட்கள் இது தெரியமாள் போச்சே என்று இருக்கும். வாங்க தெரிந்துகொள்ளலாம்.

Gas Leakage Problem in Tamil:

அனைவரது வீட்டிலும் உள்ள பொருட்களில் முக்கியமாக விளங்குவது கேஸ் தான். ஆனால் கேஸ் என்பது எவ்வளவு உதவுகிறது அதேபோல் அதில் ஆபத்தும் உள்ளது. அதனை முற்றிலும் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் பயன்படுத்த வேண்டும்.

அதனால் அதை பயன்படுத்தும் போதும் சரி பயன்படுத்தி முடித்த பிறகும் சரி கேஸ் ON-யில் உள்ளதா OFF-யில் உள்ளதா என்பதை சோதித்துவிட வேண்டும்.

ஒரு சிலருக்கு ஒரு சிலிண்டர் 2 மாதம் வரும், ஒரு சிலருக்கு 3 மாதம் கூட வரும், சிலருக்கு மிகவும் குறைவான நாள் தான் வரும். அது அவரவர் பயன்படுத்துவதை பொறுத்தது.

ஆனால் வீட்டில் அதிகம் கேஸ் பயன்படுத்த மாட்டேன் இருந்தாலும் விரைவில் கேஸ் காலியாகிறது என்னவென்று தெரியவில்லை என்பார்கள். அப்படி இருந்தால் உங்களின் கேஸ் வெளியாகிறது என்று அர்த்தம் அதை எப்படி கண்டு பிடிக்க வேண்டுமென்றால் கேஸ் பயன்படுத்திய பிறகு OFF செய்துவிட்டு.

gas

அடுப்பில் பர்னல் இருக்கும் அதன் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றிவிடவும். ஊற்றிய வேகத்திற்கு தண்ணீர் உள் சென்றால் உங்களின் கேஸ் வெளியாகவில்லை என்று அர்த்தம். அப்படி இல்லாமல் அதன் மீது பபுள்ஸ் வடிவத்தில் முட்டை போன்று வந்தால் நிச்சயம் உங்களுடைய கேஸ் வெளியாகிறது என்று அர்த்தம்.

அப்படி வெளியானால் உடனே அருகில் இருக்கும்  கேஸ் அலுவலகத்திற்கு சென்று சரியான அடுப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

முட்டை ஓடு உரிப்பது

அனைவரின் வீட்டிலும் அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமானது முட்டை. இந்த முட்டையை குழம்பு வைத்தப்பிறகு வேகவைத்து ஊரிப்பார்கள் அது விரைவில் உரிக்க கடினமாக இருக்கும். ஆக் வேகவைத்த பிறகு அதனை எடுத்து தண்ணீரில் போட்டு ஒரு ஐஸ் கட்டியை போட்டு வைத்தால் அவ்வளவு தான் பின்பு முட்டையின் மீது ஓடு ஒட்டாது ஈசியாக வரும்.

Home Use in Tamil

தோசை ஊற்ற கல் வைத்த பிறகு அதிக சூடானால் தோசை வராது பிடித்துக்கொள்ளும் சரியாக வேகாது போன்று நிறைய பிரச்சனைகள் வரும். ஆகவே அப்படி பிடித்து கொண்டால் ஒரு ஐஸ் கட்டியை காட்டன் துணியில் வைத்து தோசை கல்லில் தடவவும்.

kitchen

அசைவம் சமைத்தால் வீட்டிற்குள் வருபவர்கள் என்ன சமையல் என்று சொல்வார்கள். ஆனால் இனியாரும் அப்படி கண்டு பிடிக்க வாய்ப்பு இல்லை. வீட்டில் சமையல் செய்த பிறகு அனைத்து பாத்திரத்தை கழுவி வைத்தாலும் ஒரு பாத்திரம் கழுவினாலும் அதனுடைய வாடை இருந்துகொண்டே இருக்கும். அப்போது ஒரு காபி தூள் எடுத்து அந்த சட்டியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்தால் அந்த வாடையே வராது.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்க👉 வெங்காயம் வெட்டுறதுல இப்படி ஒரு Trick இருக்கா? இதனை நாள் தெரியாம போச்சே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil