பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று இருக்க
பாத்ரூம் கிளீன் செய்வது ரொம்ப கஷ்டமான வேலையாக இருக்கிறது. தினமும் பாத்ரூம் கிளீன் செய்தால் பளிச்சென்று இருக்கும். ஆனால் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்களால் வீட்டை கவனிக்க முடியவில்லை. வாரத்தில் ஒரு நாள் தான் கிளீன் செய்ய முடிகிறது. அதற்குள் பாத்ரூம் நாறிவிடுகிறது. மேலும் பாத்ரூம் கிளீன் செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் பாத்ரூம் கிளீன் செய்வதற்காக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்த போகிறோம். அது என்னென்ன பொருட்கள் அதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூமை பளிச்சென்று மாற்ற இதை பயன்படுத்துங்கள்:
டப் மற்றும் டைல்ஸ்:
சாதாரணமாக டப் மற்றும் டைல்ஸ் சுத்தம் செய்ய நமக்கு அதிக நேரமும் பண விரயமும் அதிகரிக்கும். அந்த பண விரயத்தை குறைக்க நீங்களே வீட்டில் உங்கள் டைல்ஸ் மற்றும் டப் சுத்தம் செய்வதற்கான பொருளை தயாரிக்கலாம். அதன் மூலம் பண விரயம் குறையும். மற்றும் நீங்கள் தயாரிக்கும் பொருளைக் கொண்டு உங்கள் பாத்ரூமை கிளீன் செய்வதால் உங்கள் நேரமும் சேமிக்க படும்.
தேவையான பொருட்கள்:
சமையல் சோடா – தேவைக்குக்கேற்ப
சூடான தண்ணீர் – 3 கப்
சோப்பு கரைசல் – தேவைக்குக்கேற்ப
வினிகர் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 கப்
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
செய்முறை:
ஒரு அகண்ட வாளியில் முதலில் 3 கப் சூடான தண்ணீருடன் சமையல் சோடா, சோப்பு கரைச்சல் மற்றும் வினிகரை கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் மாற்றிக்கொள்ளவும். அதனை உங்கள் வீட்டில் பயன்படுத்த தொடங்கும் போது அதனுடன் எலுமிச்சை சாறை கலந்து பயன்படுத்த வேண்டும்.
சுவரில் படிந்துள்ள நாள்பட்ட கறைகளை நிக்க இந்த கரைச்சல் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.
உங்கள் குளியலறையில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் இந்த கரைசலை கொண்டு குளியலறை சுவர்களை துடைப்பதன் மூலம், சுவர்களில் படிந்துள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். பிற்காலங்களில் கறைகள் ஏற்படாமல் தடுக்கும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலங்கள் படிந்துள்ள கறைகளை நீக்குவது மட்டுமில்லாமல் நோய் தொற்றுகளில் இருந்து காக்கும்.
பாத்ரூம் சுத்தம் செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலை உங்களது பாத்ரூம் மற்றும் கரை படிந்துள்ள இடங்களில் முதலில் ஸ்பிரே செய்யவேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு பிரஸினை கொண்டு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்தால் உங்கள் வீட்டின் அனைத்து இடங்களும் 15 நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |