பிரியாணி மசாலா பொடியை இப்படி பக்குவமா அரைச்சு வைச்சிக்கோங்க..!

Advertisement

Homemade Biryani Masala Recipe in Tamil

பிரியாணி என்றாலே அனைவருக்குமே பிடித்த ஒரு உணவு ஆகும். அது எந்த பிரியாணியாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அதேபோல் சைவ பிரியர்களுக்கும் சைவ உணவு பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பிரியாணி என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அப்படி அனைவருக்கும் மிக மிக பிடித்த உணவான பிரியாணியின் தனித்துவம் எதுவென்றால் அதனின் மசாலா தான். ஏனென்றால் அதனின் மசாலாவில் தான் அதன் மொத்த சுவையும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட பிரியாணி மசாலாவை நமது வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து வீட்டிலேயே எவ்வாறு பிரியாணி மசாலா பொடியை தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to make Biryani Masala Powder in Tamil:

How to make Biryani Masala Powder in Tamil

மிகவும் எளிமையான முறையில் நமது வீட்டிலேயே பிரியாணி மசாலா போடி தயாரிப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
  2. சீரகம் – 1 தேக்கரண்டி
  3. பிரியாணி இலை – 8
  4. காய்ந்த மிளகாய் – 15
  5. பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
  6. நட்சத்திர சோம்பு – 4
  7. ஜாதிக்காய் – 1/2 
  8. கருப்பு ஏலக்காய் – 2
  9. ஜாதிபத்ரி – 2
  10. கிராம்பு – 23
  11. மிளகு – 1 தேக்கரண்டி
  12. பச்சை ஏலக்காய் – 25
  13. இலவங்கப்பட்டை – 2
  14. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  15. சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  16. உலர்ந்த பிளம்ஸ் – 10 

கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க

செய்முறை:

Biryani Masala Recipe in Tamil

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 1 தேக்கரண்டி சீரகம், 8 பிரியாணி இலை, 15 காய்ந்த மிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதே கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள 4 நட்சத்திர சோம்பு, 1/2 ஜாதிக்காய், 2 கருப்பு ஏலக்காய், 2 ஜாதிபத்ரி, 15 கிராம்பு, 1 தேக்கரண்டி மிளகு, 15 பச்சை ஏலக்காய் மற்றும் 2 இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் நாம் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 8 கிராம்பு, 10 பச்சை ஏலக்காய் மற்றும் 10 உலர்ந்த பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

கோவில் புளியோதரை சுவையில் இனி வீட்டிலே செய்ய பொடி இப்படி செஞ்ச போதும்.

நாவிற்கு கூடுதல் சுவையை தரும் ஐயர் வீட்டு ரசப்பொடி இப்படி செய்யுங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement