கலர் கோலமாவு இனி கடையில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம்

Advertisement

கலர் கோலமாவு செய்வது எப்படி? | Homemade Color Rangoli Powder in Tamil

மார்கழி மற்றும் தை மாதம் என்றாலே பெண்கள் காலை எழுந்து பல வண்ண வண்ண கோலங்களை போடுவார்கள், அந்த கோலத்திற்கும் கலர் அடிப்பார்கள். அதனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கோலத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக பலர் அதிகம் காசு கொடுத்து கலர் கோலமாவை கடைகளில் வாங்குகின்றன. இனி கடைகளில் கலர் கோலமாவை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே கலர் கோலமாவை தயார் செய்யலாம். அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கலர் கோலமாவு தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. பச்சை இலை சாறு  – தேவைக்கேற்ப
  2. பீட்ரூட் சாறு – தேவைக்கேற்ப
  3. கேசரி பவுடர் ஆரஞ்சு நிறம் – தேவைக்கேற்ப
  4. கேசரி பவுடர் சிவப்பு நிறம் – தேவைக்கேற்ப
  5. தண்ணீரில் குழைத்த மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
  6. புட் கலர் உங்களுக்கு பிடித்த எந்த கலராக இருந்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.
  7. கோலமாவு – தேவையான அளவு
  8. பச்சரிசி மாவு – தேவையான அளவு
  9. கருப்பு நிற இங்
  10. நீலநிற இங்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

கலர் கோலமாவு கலப்பது எப்படி?கலர் கோலமாவு கலப்பது எப்படி

முதலில் 1/2 கப் பச்சரிசி மாவில் 1/2 கப் கோலமாவை கலந்து கொள்ளுங்கள்.

பச்சை நிறத்திற்கு எந்த இலையாக இருந்தாலும் சரி அதனை தேவையான அளவு எடுத்து  மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றில் இருந்து சாறு பிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

மற்றொரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அரிசிமாவுடன் கலந்து வைத்துள்ள கோலமாவை 5 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் பிழிந்து வைத்திருக்கும் பச்சை சாறை சிறிதளவு சேர்த்து  அரைக்கவும், அவ்வளவு தான் பச்சை நிறம் தயார்.

பிறகு சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுத்தீர்கள் என்றால் பச்சை நிற கோலமாவு தயார்.

அதேபோல் மற்ற கலர் சாயங்கள் மற்றும் கலர் பொடியை இது போன்று மிக்சியில் அரைத்து எடுத்து, வெயிலில் காயவைத்து எடுத்தீர்கள் என்றால் கலர் கோலமாவு தயார். இதற்காக  கடைகளில் காசு கொடுத்து கலர் கோலமாவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

ரங்கோலி டிசைன் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Rangoli Designs

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement