How to Make Colour Paper at Home in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஒரு அருமையான பதிவு பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக சிறிய குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரையும் கைவினை பொருட்கள் அதிகமாக செய்வார்கள். இதனால் கடைகளில் காசுகொடுத்து கலர் பேப்பர்களை வாங்குவார்கள், இனிமேல் உங்களுக்கும், குழந்தைகளுக்கும் கலர் பேப்பரை அதிகமாக காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே கலர் பேப்பர் செய்யலாம். மேலும் அவற்றை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கைவினை தொழில் ஐடியாக்கள்..! |
கலர் பேப்பர் செய்வது எப்படி.?
டிப்ஸ் :1
தேவையான பொருட்கள்:
- Talcum Powder – தேவையான அளவு
- Fevicol Glue -1 தேக்கரண்டி
- நீலம் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொண்டு உங்களுக்கு தேவையான அளவு Talcum Powder எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு Gule சேர்த்து கொண்டு அதன் பிறகு 1 ஸ்பூன் நீலம், அதன் பிறகு தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். நன்றாக கலக்கிய பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு கலந்து வைத்த கலவையில் நனைத்து உங்களிடம் இருக்கும் தேவையில்லாத நோட்டு தாள்களில் அதை தேய்க்க வேண்டும். இந்த நீலத்தை வைத்து நான்கு கலர்கள் தயாரிக்க முடியும். இப்பொழுது நீலம் கலர் தயார்.
கலர் பேப்பர் செய்வது எப்படி.?
டிப்ஸ் :2
தேவையான பொருட்கள்:
- தண்ணீர்- தேவையான அளவு
- Acrylic Paint-Pink தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் Acrylic Paint-Pink கலர் சிறிதளவு , அதில் 3 சொட்டு தண்ணீர் சேர்த்து கலக்கி விட வேண்டும். Sponge brush வைத்து ஒரு பேப்பரை எடுத்து அதில் முழுவதுமாக தடவி காயவைக்க வேண்டும். இப்பொழுது கலர் பேப்பர் தயார்.
கலர் பேப்பர் செய்வது எப்படி.?
டிப்ஸ் :3
பெயிண்ட் இல்லாமல் கலர் பேப்பர் செய்வதற்கு ஒரு சின்ன ஐடியா.! உங்கள் வீட்டில் இருக்கும் பவுடர் Food colour, liquid food colour மற்றும் பேனாவிற்கு பயன்படுத்தும் இங் கலர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் காபி பவுடர் இருந்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒன்றை எடுத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஷாம்பு, பவுடர் மற்றும் Glue போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் அதில் எடுத்துக்கொண்டு , பிரவுன் கலர் வேண்டும் என்றால் காபி தூளை கலந்து கொள்ளவும். அதை பேப்பரில் sponge brush வைத்து அதில் தேய்த்து காயவைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பயனுள்ள குறிப்புகளை நீங்களும் செய்து, பணத்தை சேமியுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |