Dishwashing Liquid at Home
பெண்கள் அன்றாடம் செய்யும் வேலைகளில் இதுவும் ஓன்று. அது என்னவென்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை பாத்திரம் கழுவுவதை தான் கூறுகின்றோம். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தினமும் செய்யும் வேலைகளில் பாத்திரம் கழுவுவதும் ஒன்றும். சரி பாத்திரம் கழுவுவதற்கு நாம் கடைகளில் விற்கும் சோப்பு அல்லது லிக்விடு வாங்கி வந்து பயன்படுத்துவோம். அதில் கெமிக்கல் சேர்ப்பதால் சில நாட்களுக்கு அப்புறம் கைகளில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் லிக்விடு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Dishwashing Liquid at Home in Tamil:
- எலுமிச்சை பழம் – 5
- உப்பு – 3 ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 3 ஸ்பூன்
- வினிகர் – 100 ml
- டிட்டர் ஜெண்ட் லிக்விடு – 50 ml
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இந்த நாளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்க |
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -2
பின் 5 எலுமிச்சை பழத்தின் தோலை மட்டும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 3 ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இதை 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
உங்கள் பாத்ரூம் மற்றும் வீடு வாசனையாக இருக்க இந்த 1 பொருள் போதும்..! |
ஸ்டேப் -3
பின்பு அதில் பேக்கிங் சோடா 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து 15 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். பின் அதன் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
ஸ்டேப் -4
பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதில் 100 ml வினிகரை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் டிட்டர் ஜெண்ட் லிக்விடு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது டிட்டர்ஜெண்ட் பவுடரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் பாத்திரம் கழுவும் லிக்விடு தயார். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். பின் இந்த லிக்விடை பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தலாம். பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சென்று மாறிவிடும்.
உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..! |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |