கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க..!

Advertisement

கரம் மசாலா பொடி செய்வது எப்படி? Garam Masala Podi Seivathu Eppadi

Homemade Garam Masala Powder Recips in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான பதிவை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது அசைவ உணவுகளுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் கரம் மசாலா பொடி செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த கரம் மசாலா பொடி செய்ய தேவைப்படும் பொருட்கள் என்னென்ன, எப்படி முறையான முறையில் நல்ல பக்குவத்துடன் கரம் மசாலா பவுடர் தயார் செய்யலாம் என்று பார்க்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள் – Garam Masala Powder Ingredients in Tamil:

  1. மல்லி – 20 கிராம்
  2. பட்டை – 20 கிராம்
  3. கிராம்பு – 20 கிராம்
  4. ஏலக்காய் – 20 கிராம்
  5. சோம்பு – 30 கிராம்
  6. மிளகு – 15 கிராம்
  7. சீரகம் – 15 கிராம்
  8. கசகசா – 5 கிராம்
  9. கல்பாசி – சிறிதளவு
  10. ஜாதிபத்திரி  –  இரண்டு
  11. மராத்தி மூக்கு – மூன்று
  12. ஜாதிக்காய் – ஒரு சிறிய துண்டு
  13. அண்ணாச்சி பூ – ஐந்து
  14. கருப்பு ஏலக்காய் – இரண்டு
  15. பிரிஞ்சி இலை – இரண்டு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மணக்கும் சுவையில் அசத்தலான ஐயர் வீட்டு இட்லி பொடியை இப்படி செய்யுங்க..!

கரம் மசாலா பொடி செய்முறை – Homemade Garam Masala Powder Recips in Tamil:Garam Masala

அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் 20 கிராம் மல்லி, 20 கிராம் பட்டை, கிராம்பு 20 கிராம், ஏலக்காய் 20 கிராம், சோம்பு 30 கிராம், மிளகு 15 கிராம், சீரகம் 15 கிராம், 5 கிராம், ல்பாசி சிறிதளவு, ஜாதிபத்திரி இரண்டு, மராத்தி மூக்கு மூன்று, ஜாதிக்காய் ஒரு சிறிய துண்டு, அண்ணாச்சி பூ ஐந்து, கருப்பு ஏலக்காய இரண்டு மற்றும் பிரிஞ்சி இலை இரண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

வதக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் வதக்க வேண்டும். வாணலியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஓரளவு வாசனை வந்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைக்கவும்.

வறுத்த மசாலா பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு மிக்சி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் உங்கள் தெருவே மணக்க கூடிய கரம் மசாலா தயார், அரைத்த கரம் மசாலாவை உடனே டப்ப்பாவில் போட்டு அடைத்து வைக்க வேண்டாம், அவற்றில் இருக்கும் வெப்பம் தணியும் வரை நன்கு ஆறவைத்து பின்பு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

இந்த கரம் மசாலா பொடி குருமா குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, சப்பாத்தி குருமா போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். கண்டிப்பாக உங்கள் வீட்டில் இந்த முறையில் ஒரு முறை கரம் மசாலா பொடி ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி சாஃப்ட்டாக மல்லிப்பூ போல இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement