Homemade Liquid for Bathroom Cleaning in Tamil
நமது வீடுகளில் உள்ள பெண்களுக்கு வீடு வேலை செய்வது என்பதை மிக மிக சவாலான ஒரு விஷயமாக இருக்கும். அதில் மிக மிக கடினமான ஒரு வேலை என்றால் நமது வீட்டினை சுத்தமாக பராமரிப்பது. அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் மிக மிக அதிக அளவு அசுத்தம் அடையும் இடங்கள் என்றால் அது நமது சமையல் அறை மற்றும் நமது வீடுகளில் உள்ள பாத்ரூம்கள் தான். அங்கு படிந்துள்ள கறைகளை போக்க நாம் மிக மிக அதிகமாக கஷ்டப்படுவோம். அதனால் தான் இன்றைய பதிவில் நமது பாத்ரூமில் படிந்துள்ள உப்பு கறைகளை போக்கி பளபளப்பாக மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாத்ரூம் டைல்ஸ் கிளீனிங்:
நமது பாத்ரூமில் படிந்துள்ள உப்புக்கறைகளை போக்கி மிகவும் சுத்தமாக வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- கல் உப்பு – 1 கைப்பிடி அளவு
- சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
10 நிமிடத்தில் பாத்ரூம் கதவு பளபளப்பாக பேக்கிங் சோடாவுடன் இதை சேர்த்து பயன்படுத்துங்க
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கல் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இறுதியாக அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதனை உங்களது பாத்ரூமில் எங்கெல்லாம் கறை படிந்துள்ளதோ அங்கெல்லாம் தெளித்து 10 முதல் 20 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள் அதன் பிறகு லேசாக தேய்த்து கழுவினால் அங்கு உள்ள அனைத்து கறைகளும் நீங்கிவிடும்.
பல வருடங்களாக பாத்ரூமில் படிந்துள்ள உப்பு கறையை வெறும் 10 நிமிடத்தில் போக்க தயிர் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |