Homemade Mosquito Repellent Liquid in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள மாசுபாட்டின் காரணமாக கொசுக்களின் தொல்லை அதிகமாகி விட்டது. அதனை விரட்டுவதற்காக நாமும் பல வகையான இயற்கை மற்றும் செயற்கையான முயற்சிகளை கையாண்டிருப்போம். ஆனால் அவையாவும் நமக்கு கைக்கொடுத்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி ஒரு பைசா கூட செலவில்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்காக கொசு விரட்டி லிக்விட் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
How to make Natural Mosquito Repellent Liquid in Tamil:
பொதுவாக கொசுக்கடி வாங்கியவர்களுக்குத்தான் தெரியும் கொசு எவ்வளவு கொடூரமான பூச்சு என. இந்த கொசு கடியினால் பலரின் இரவு தூக்கம் பறிபோயிருக்கும்.
அதனால் தான் வீட்டிலேயே இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்காக கொசு விரட்டி லிக்விட் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- பூண்டு தோல் – 2 கைப்பிடி அளவு
- சூடம் – 10
- ஜவ்வாது – 1 சிட்டிகை
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- Repellent Liquid Bottle – 1
உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமாக உள்ளதா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பிலை, 2 கைப்பிடி அளவு பூண்டு தோல், 10 சூடம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதனை அடுப்பில் வைத்து லேசாக கொதிக்க வைத்து அதனை இன்னும் ஒருமுறை வடிகட்டி கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளுங்கள்:
இப்பொழுது அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஜவ்வாதினை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 சிட்டிகை ஜவ்வாதினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள Repellent Liquid Bottle-ல் ஊற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனை லிக்விட் 1 மாதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |