Homemade Natural Bathroom Cleaner
பொதுவாக பாத்ரூம் கட்டிய புதிதில் வாசனையாகவும், பளிச்சென்றும் இருக்கும். பயன்படுத்த பயன்படுத்த பாத்ரூமில் விடாப்பிடியான கறைகள் படிந்துவிடும். மேலும் துர்நாற்றமும் வந்து விடும். இதனை நீக்குவதற்காக பல கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் கறைகள் நீங்காது. அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பாத்ரூமை எப்படி கிளீன் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குளியலறையை சுத்தம் செய்ய:
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பேக்கிங் சோடா, குளிக்க பயன்படுத்தும் சோப், 2 கப் சூட தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதனை குளியலறையில் ஊற்றி ஒரு 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவி விடவும்.
இல்லையென்றால் வெறும் பேக்கிங் சோடாவை மட்டும் குளியலறையில் தெளித்து விடவும். அதன் பிறகு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும்.
இனி பிரிட்ஜை திறந்தாலே வாசம் மட்டும் தான் வரும்..! அதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!
கழிவறை சுத்தம் செய்ய:
ஒரு கப்பில் வெள்ளை வினிகர் சிறிதளவு, பேக்கிங் சோடா ஒரு கப் சேர்த்து கையை பயன்படுத்தாமல் ஒரு கரண்டியை பயன்படுத்தி கலந்து கொள்ளவும். இந்த பேக்கை பயன்படுத்தி கழிவறையில் ஊற்றி 20 நிமிடத்திற்கு அப்படியே விடவும். அதன் பிறகு பிரஸ் அல்லது வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விடவும்.
வினிகர் இல்லையென்றால் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரை கழிவறையில் தூவி விடவும். 20 நிமிடம் கழித்து பிரஸ் அல்லது வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை பயன்படுத்தி கழுவி விடவும். இதன் மூலம் பாத்ரூம் நன்கு வாசனையாக இருக்கும்.
வெஸ்டர்ன் பாத்ரூம் வாசனையாக இருக்க:
வெஸ்டர்ன் டாய்லெட் வாசனையாக இருக்க வெஸ்டர்ன் வாட்டர் டேங்கை ஓபன் செய்து அதில் உள்ளே துவைக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் எதாவது ஒன்றை போடவும். நீங்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தி விட்டு பிரஸ் செய்யும் போது வாசனையாகவும் அழுக்கு கறை படியாமலும் இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க…
2 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யலாம் வீட்டில் உள்ள ஒரு பொருள்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |