Homemade Oil for Glowing Skin in Tamil
பொதுவாக குளிர்காலம் அல்லது பனிக்காலம் வந்துவிட்டாலே நமது சருமம் பொலிவு இழந்து காணப்படும். அவ்வாறு பொலிவிழந்து காணப்படும் சருமத்தை நன்கு பொலிவு பெற உதவும் வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி Homemade Body Oil தயாரிப்பது எப்படி என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.
அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் சருமமும் பொலிவிழந்து காணப்பட்டால் அதனின் பொலிவை மீட்டுக்கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த Homemade Body Oil தயாரிப்பது என்பது விரிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Body Oil for Glowing Skin in Tamil:
முதலில் இந்த Homemade Body Oil தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
- கேரட் துருவல் – 2 கப்
- தேங்காய் பால் – 1 கப்
- வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
- எள்ளு – 4 டேபிள் ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- பாதாம் – 16
- வைட்டமின் E கேப்சூல் – 6
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 4 டேபிள் ஸ்பூன் எள்ளு மற்றும் 16 பாதாம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து ஒரு கடாயில் 2 கப் கேரட் துருவல், 1 கப் தேங்காய் பால், 2 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்தூள் மற்றும் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் அந்த கடாயை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடுங்கள். அது நன்கு கொதித்த பிறகு அதில் நாம் முன்னரே அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் சூடு ஆறவிடுங்கள். பிறகு அந்த எண்ணெயை ஒரு மூடிப் போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். அதில் 6 வைட்டமின் E கேப்சூலையும் நறுக்கி அதில் உள்ள மருந்தை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த Homemade Body Oil-ளை தினமும் தடவி வருவதன் மூலம் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெரும். இந்த Homemade Body Oil-ளை நீங்களும் உங்கள் வீட்டில் தயார் செய்து பயன்படுத்துங்கள்.
இதையும் படியுங்கள்=> பனிக்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |