Homemade Room Freshener in Tamil
வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்போம். அதற்காக கடைகளில் விற்கும் ஸ்பிரே பயன்படுத்துவார்கள். ஆனால் கடையில் விற்கும் ஸ்ப்ரே வாங்கி அடிப்பதன் மூலம் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்த கூடும். ஏனென்றால் அதில் கெமிக்கல் சார்ந்த பொருட்கள் சேர்த்திருப்பதால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்த கூடும். அதுமட்டுமில்லாமல் அதிக காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதனால் இந்த நிலையை தவிர்க்க வீட்டிலேயே ரூம் ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
புதினா ஸ்ப்ரே:
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர், 2 தேக்கரடி வெண்ணிலா சாறு, மிளகு கீரை எண்ணெய் 8 சொட்டு சேர்த்து எல்லாம் ஒன்றோடு ஒன்று மிக்ஸ் ஆகும்படி கலந்து கொள்ளவும். இதனை பிளாஸ்டிக் பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். பாட்டிலின் மூடி பகுதியில் சிறிய சிறிய ஓட்டைகளாக போட்டு கொள்ளவும். இந்த ஸ்ப்ரே பயன்படுத்தி வீடு மற்றும் ரூம் போன்ற அறைகளில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.
வெறும் எலுமிச்சை பழம் மட்டும் போதும் வீட்டில் பூச்சிகள் எதுவும் வராமல் இருக்க..!
லாவெண்டர் ஸ்ப்ரே:
ஒரு கிண்ணத்தில் 3 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி வெண்ணிலா சாறு, லாவெண்டர் எண்ணெய் 8 சொட்டுகள், கெமோமில் எண்ணெய் 5 சொட்டு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றவும். பாட்டிலின் மூடி பகுதியில் சிறிய சிறிய ஓட்டைகளாக போட்டு பயன்படுத்தவும்.
எலுமிச்சை ஸ்ப்ரே:
ஒரு கப்பில் 2 கப் தண்ணீர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த கலவையை பாட்டிலில் ஊற்றி வீடு மற்றும் ரூம்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.
ரோஸ்மேரி எண்ணெய்:
3/4 கப் தண்ணீர், மிளகுக்கீரை எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் 2 தேக்கரண்டி, மிளகு கீரை எண்ணெய் 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1/2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மேல் மூடியின் பகுதியில் ஓட்டை போட்டு பயன்படுத்தவும்.
உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |