Homemade Washing Powder in Tamil
துணி துவைப்பதற்கு சோப்பை விட சர்ப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த சோப்பை வாங்குவதற்கு கடையில் சென்று வாங்குவோம். சில பவுடர் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அலர்ஜியை ஏற்படுத்தாமலும், விலை குறைவாகவும் வீட்டிலையே துணி துவைக்கும் பவுடர் தயாரிக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் பாத்ரூம் வாசனையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Homemade Washing Powder in Tamil:
துணி துவைக்கும் பவுடர் தயாரிப்பதற்கு முதலில் ஊதா நிறத்தில் 2 சோப்பு, Coconut Soap 2, குளிக்க பயன்படுத்தும் சோப் 1 எடுத்து கொள்ளவும்.
இந்த மூன்று சோப்புகளையும் சீவி எடுத்து கொள்ளவும். பிறகு மூன்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு தட்டில் சேர்த்து பரப்பி கொள்ளவும். பின் இதனை வெயிலில் 2 மணி நேரத்திற்கு காய வைக்கவும்.
2 மணி நேரம் காய வைத்து எடுத்த பிறகு மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை அரைத்து எடுத்தால் 200 கிராம் சோப் பவுடர் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம். எந்த அலர்ஜியும் ஏற்படாது, மேலும் வாசனையாகவும் இருக்கும்.
பாத்ரூம் முழுவதையும் சுத்தம் செய்வதற்கு இதை மட்டும் செய்யாமல் இருக்காதீர்கள்..!
பாத்ரூம் வாசனையாக இருக்க:
குளிக்க பயன்படுத்தும் சோப் ஒன்று எடுத்து சீவி கொள்ளவும். அதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கொள்ளவும். அதனுடன் comfort 1 மூடி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை குறைவான தீயிலே வைத்து சேர்த்த பொருட்கள் எல்லாம் கரையும் வரை கொதிக்க விடவும்.
கொதிக்க வைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்-யில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் கட்டி கட்டியாக வந்திருக்கும் அதை பீஸ் பீஷாக போட்டு ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
இதிலிருந்து ஒரு கட்டியை மட்டும் எடுத்து வெஸ்டர்ன் பாத்ரூம் வாட்டர் பாக்சில் உள்ளே போடவும். நீங்கள் ஒவ்வொரு முறையும் பிரஸ் செய்யும் போது பாத்ரூம் வாசனையாக இருக்கும்.
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இந்த நாளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |