வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | House Cleaning Tips in Tamil
வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது எல்லோருக்கும் ஒரு பெரிய வேலையாக இருக்கும். வீட்டை பொதுவாக எல்லோரும் பண்டிகை காலங்களில் அல்லது விசேஷ நாட்களில் தான் சுத்தம் செய்வார்கள், அப்பொழுது வேலை பளு சற்று அதிகமாக இருக்கும். நாமும் இல்லம் பளபளவென இருப்பதற்காக துடைப்பம் அல்லது துணி வைத்து துடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டை துடைக்க கவலைகொள்ளும் இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த பதிவில் அதிக நேரம் எடுத்துகொள்ளாமல் குறைந்த நேரத்திலேயே வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கலாம் என்ற எளிமையான குறிப்புகளை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
Sink Cleaning Tips in Tamil:
- House Cleaning Tips in Tamil: அனைவரும் உபோயோகிக்கும் இடம் sink அதனால் அழுக்குகள் கறைபடிந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். இந்த அழுக்கை சுத்தம் செய்வதற்கு sink தண்ணீர் போகும் இடத்தில் வினிகரை ஊற்றவும்.
- பின்னர் அதில் பேக்கிங் சோடாவை தெளிக்கவும் (sink – ல் இருந்து தண்ணீர் வெளியே போகாதவாறு sink – ஐ மூடி விடவும்) அரை மணி நேரம் வைத்து அதன் பிறகு வெந்நீர் வைத்து ஊற்றினால் சிங்க் பளிச்சென்று பிரகாசிக்கும்.
Bedroom cleaning:
- காலையில் எழுந்ததும் படுக்கையறையில் பெட்ஷீட்டை மடித்து வைத்து விட வேண்டும்.
- இரவு தூங்கும்போது துணிகள், சாக்ஸ், புத்தகங்கள் போன்றவை கட்டிலின் மேல் இருந்தால் அதை Self-ல் வைத்து விட வேண்டும்.
- வாரம் ஒரு முறை பெட்டை நகர்த்தி உதறிப் போடவேண்டும். இவ்வாறு செய்தால் கட்டிலில் பூச்சிகள் எதுவும் தங்காது.
Hall Cleaning:
- House Cleaning Tips in Tamil: ஹால் சுத்தமாக இருப்பதற்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்தாலே போதும்.
- அழுக்கு துணிகள் இருந்தால் அதை கதவிலோ அல்லது நாற்கலியிலோ போடாமல் துணி போடுவதற்கு இருக்கும் டப்பில் போட்டு வைத்து விடவும்.
தரைகள்:
- தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை விட பயன்படுத்தாத பழைய ஷாம்பு இருந்தால் அதை வைத்து வீட்டை துடைக்கலாம். வீடு பளிச் என்று ஆகும்
Fan cleaning:
- ஹவுஸ் கிளீனிங்: ஃபேன் சுத்தம் செய்வதற்கு ஒட்டடை குச்சியை பயன்படுத்தாமல் தலையணை உரையை பயன்படுத்தலாம்.
- உறை பழையது எடுத்து மின்விசிறியின் இறக்கையில் மாட்டி மென்மையாக தலைப்பகுதியிலிருந்து நுனி வரை இழுத்து விடலாம்.
- இதனால் அழுக்குகள் கீழே கொட்டி தரையை அழுக்கு படுத்தாமல் இருக்கும்.
Bathroom Cleaning:
- Toilet Cleaning Tips in Tamil: வீட்டில் உள்ள இடத்திலேயே கழிவறை மிக முக்கியமான இடம் என்றே சொல்லலாம். கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடா மற்றும் ப்ளீச்சிங் பவுடர் உபயோகிக்கலாம்.
- பேக்கிங் சோடா உடன் ப்ளீச் சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி பின்னர் பிரஸ் வைத்து அழுக்கு இருக்கும் இடத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். 30 நிமிடம் கழித்து கழுவினால் கழிப்பறை சுத்தமாக இருக்கும்.
செலவே இல்லாமல் உங்கள் வீட்டு பாத்ரூமை 24 மணி நேரமும் வாசம் வீச இந்த 1 பொருள் இருந்தால் போதும். |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |