வீட்டைத் துடைக்கும் போது அரை டம்ளர் இதை மட்டும் ஊத்துங்க.. வீடு பளிச்சென்று இருக்கும்.. செலவில்லாத கிளிக்கிங் டிப்ஸ்..!

Advertisement

House Cleaning Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு இரண்டு அல்லது ஒரு முறையாவது வீடு துடைப்போம். அந்த வீடு துடைப்பதற்க்கான டிப்ஸை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். அதாவது வீடு துடைப்பதற்கு ஏதாவது லிக்விட் வகைகளை தான் நாம் பயன்படுத்துவோம். அனால் அது கொஞ்சம் நேரம் வீடு வாசனையாக தான் இருக்குமே தவிர வீட்டின் தரையில் உள்ள கிருமிகள் போகாது. அந்த கிருமிகளை போகாத ஒன்றை காசு கொடுத்து வாங்கித்தான் நாம் வீடு தரையை துடைத்து வருகிறோம். இனி அப்படி காசை வீணாக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், இந்த லிக்விட்டை வீட்டில் தயார் செய்து வீடு துடைக்க பயன்படுத்துங்கள். இதற்கு நாம் காசு செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தியே தயார் செய்துவிடலாம். சரி வாங்க அது எப்படி தயார் செய்ய வேண்டும். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு
  2. கல் உப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – ஒரு பழம் அளவு
  5. அந்துருண்டை – ஒன்று
  6. ஜவ்வாது – ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் வேப்பிலை இரண்டு கைப்பிடியளவி, இரண்டு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு ஒரு முழு பழத்தின் அளவு, அந்துருண்டை ஒன்று மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.

அரைத்த கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அவற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் உத்திரவு பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் ஜவ்வாது செய்து நன்றாக கலந்துவிடுங்கள்.

இவ்வாறு கலந்த பிறகு ஒரு வடிகட்டிய பயன்படுத்தி வடிகட்டவும். பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.

House Cleaning Tips in Tamil – பயன்படுத்தும் முறை:

அரை வாளி நீரில் ஒரு டம்ளர் நாம் தயாரித்த இந்த லிக்விட்டை ஒரு டம்ளர் அளவு ஊற்றி நன்றாக கலந்துவிடுங்க வீடு துடைக்கலாம். இதனால் வீட்டு தரையில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். வீடும் பளிச்சென்று இருக்கும். மேலும் இவற்றில் சேர்க்க பட்டிருக்கும் ஜவ்வாது வீட்டை 24 நேரமும் நறுமணம் வீசும்.

ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை வைக்காமலேயே பழைய வெள்ளை துணியை புதியது போல மாற்றுவதற்கும் வாசனையாக வைப்பதற்கும் இந்த ஒரு டிப்ஸ் போதும்..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement