வீடு கட்டுவது எப்படி?
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கான சில சிறப்பான டிப்ஸ்களை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சிலர் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு இடம் வாங்கி, அவர்களின் ஆசைகள் படி வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் வீடு கட்டுவதற்கு என்னென்ன தேவைப்படும் என்று அறியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். மேலும் சொந்தமாக வீடு கட்டுவதற்கு என்னென்ன தேவைப்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க.
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை |
House Construction Tips in Tamil:
முதலில் வீடு கட்டுவதற்கு தண்ணீர், சிமெண்ட், செங்கல், அஸ்திவாரம், பெயிண்ட் போன்ற வீட்டிற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும். மேலும் இவற்றில் உள்ள பொருட்களின் தரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தண்ணீரின் தரம்:
- வீடு கட்டும் பொழுது பயன்படுத்தும் தண்ணீரில் உப்பு அதிகமாக இல்லாத தண்ணீராக இருக்க வேண்டும்.
- உப்பு அதிகமாக உள்ள தண்ணீரை உபயோக்கிம் பொழுது கட்டுமானம் மெள்ள மெள்ள அரிப்புக்கு உள்ளாகும்.
- வெப்பத்தை தாக்கு பிடிக்கும் மோட்டர்களான அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களை வாங்கி வைப்பதன் மூலம் அடிக்கடி ரிப்பேர் ஆவதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
- அப்படி இல்லையென்றால் ஆழ்துளை கிணறுகள், நீர் மூழ்கி மோட்டர்களையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதில் அதிகமான கவனம் தேவை.
சிமெண்ட் தரம்:
- நாம் கட்டும் வீடானது சிமெண்டியின் தரத்தை பொறுத்துதான் அமைந்துள்ளது. அந்த வகையில் சிமெண்ட் வாங்கும் பொழுது நிறத்தை பார்த்து வாங்குவது நல்லது.
- பசுமை நிறத்தில் இருக்கும் சிமெண்ட்கள் நல்ல சிமெண்ட்.
- சிமெண்ட் முட்டைக்குள் கைகளை விடும்பொழுது கூல்லிங்காக இருந்தால் அது நல்ல சிமெண்ட்.
- அதே போல் தண்ணீர் இருக்கும் வாளியில் சிறிதளவு சிமெண்ட்டை போட்டால் அது மிதக்காமல் கிலே இருந்தால் நல்ல சிமெண்ட் ஆகும்.
இரும்புக் கம்பிகளின் தரம்:
- வீடு கட்டுவதற்கு கான்கிரீட்டுக்கு வீட்டை வலுப்படுத்தி உறுதி செய்வதற்கு இரும்பு கம்பிகள் மிகவும் தரமாக இருப்பது அவசியம்.
- ஆலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சில கம்பிவகைகளான பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சில பிசுறுகள் அதிகமாக இருக்கும் அவற்றை வீட்டின் பின்புறங்களுக்கு பயன்படுத்தலாம்.
- இரும்பு கம்பிகளில் துருக்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அதே போல் அதில் அழுக்கு, எண்ணெய், பிசுறுகள் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.
மணலின் தரம்:
- வீடு கட்டும் பொழுது மணலை சலித்து தூசு துருப்புகள் எதுவும் இல்லாத மணலாக இருப்பது நல்லது.
- மணலில் எட்டு சதவீதம் வண்டல் மண் கலந்திருந்தால் உபயோக்கிக்கலாம். அதிகமாக கலந்திருந்தால் அதை பார்க்கும் பொழுதே தெரிந்துவிடும்
- கடல் மணல்களில் கட்டப்படும் வீடுகள் சீக்கிரமாகவே உதிர்ந்து விடும். கடல் மண்ணில் உப்புகள் அதிகமாக இருப்பதால், கடல் மண்ணில் வீடு கட்டுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
- அதேபோல் மணல்களில் தவிடுகள் போன்ற சிலிக்கா அதிகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
செங்கல் தரம்:
- வீட்டின் வலிமைகளையும், உறுதியையும் நிர்ணகிப்பது செங்கல் ஒரு முக்கியாக கட்டுமான பொருளாகும். செங்கல்கள் இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகின்றன சூளை மற்றும் சேம்பர் போன்றவையாகும்.
- எனவே செங்கல் உறுதிகளை தெரிந்துகொள்வதற்கு 4 செங்கலை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை சுரண்டி பார்க்கும் பொழுது பிசுறுபிசுராக வந்தால் அதனுடை தரம் குறைந்த செங்கல் ஆகும்.
- இன்டர்லாக் செங்கல்கள் என்று சொல்லப்படும் இவை வேலைகளை சீக்கிரமாக முடிப்பதற்கு பயன்படுகிறது. இவை நிலக்கரி, சாம்பல், ஜிப்சம் போன்ற பொருட்களின் கலவையாகும்.
- இந்த கல் வீட்டை உறுதியாக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்டர்லாக் செங்கல்கள் ஆனது மூன்று செங்கலுக்கு சமம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |