வீட்டில் அட்டகாசம் செய்யும் ஈக்களை விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்..

Advertisement

ஈக்களை விரட்டுவது எப்படி.?

பொதுவாக வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் ஈக்கள் மொய்த்து கொண்டே தான் இருக்கும். இதனை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும். அதும் வீட்டில் உணவுகள் மீது வந்துவிடும். இவை வீட்டில் தொந்தரவு செய்வதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தில் பிரச்சனையும் ஏற்படுத்துகிறது. ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இனி கவலை வேண்டாம். ஏனென்றால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஈக்களை விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

வினிகரை பயன்படுத்தி ஈக்களை விரட்டுவது எப்படி.?

 ஈக்களை விரட்டுவது எப்படி

முதலில் ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்து கொள்ளவும். இதனை மூடி உள்ள பகுதியை நறுக்க வேண்டும். அதன் பிறகு பாட்டிலில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் வினிகர் சிறிதளவு, சீனி 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து விட வேண்டும். பின் இதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரும் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். மூடி நறுக்கிய பகுதியை தலை கீழாக பாட்டிலில் வைக்க வேண்டும். இதனை ஈக்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும்.

இல்லையென்றால் இந்த தண்ணீரை வீட்டில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விட்டு ஒரு காட்டன் துணியால் துடைத்து விட வேண்டும். இந்த வினிகர் வாசத்திற்கு ஈக்கள் வராது.

வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும் 

தேன் மற்றும் பேப்பர்:

 ஈக்களை விரட்டுவது எப்படி

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் தேன் 1/4 கப் சேர்த்து கலந்து விடவும். பிறகு ஒரு பேப்பர் எடுத்து கொள்ளவும். இதில் தேன் தண்ணீரை தடவி விடவும். இந்த பேப்பரை ஈக்கள் எங்கு அதிகமாக வருமோ அந்த இடம் அல்லது ஜன்னல் பகுதிகளில் ஊட்டி விட வேண்டும். இந்த பேப்பர்களில் ஈக்கள் வைத்து மொய்க்கும். மற்ற இடங்களில் ஈக்கள் மொய்க்காது.

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement