வீடு புதிதாகவே இருக்க
வீடு அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் வீட்டை கைவைக்க முடியவில்லை. காலை வேலைக்கு சென்று மாலை வருகிறார்கள். வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லி கொடுத்து விட்டு, இரவு சமையலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. வீடு கட்டிய புதிதில் அழகாக இருக்கும், வருடங்கள் ஆக ஆக வீடு பழையதாக காட்சியளிக்கும். இதற்கு முக்கிய காரணம் வீட்டை சரியாக பராமரிக்காமல் இருப்பதே அதனால் இந்த பதிவில் வீட்டை எப்படி புதிதாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வீடு புதிதாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்:
முதலில் வீட்டை காலை மற்றும் மாலை இரு வேலையும் சுத்தமாக பெருக்க வேண்டும். ஏனென்றால் வீடு தூசிகள் இல்லாமல் இருந்தாலே அழகாக இருக்கும்.
சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, டைல்ஸ் தரையாக இருந்தாலும் சரி வாரத்தில் ஒரு நாள் வீட்டை கழுவி விட வேண்டும். அல்லது மாப் போட வேண்டும். அப்போது தான் வீட்டில் உள்ள அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும்.
அடுத்ததாக வீடு முழுவதும் கட்டாயம் வருடத்திற்கு ஒரு முறை பெயிண்ட் அடிக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் உள்ள சுவர்கள் வெடிக்காமலும், பளிச்சென்றும் இருக்கும்.
கிச்சன் எப்போதும் பளிச்சென்று இருக்க தெரிந்துக்கொள்ள கொண்டிய டிப்ஸ்..!
கிட்சன் அழகாக இருக்க:
கிட்சனை பார்த்தாலே அந்த வீட்டை எவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கேஸ் அடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை துடைத்து விட வேண்டும். நீங்கள் அப்படியே சேர்த்து வைத்து துடைத்தால் கேசும் சரி, அதை சுற்றியுள்ள இடமும் சரி பழையதாக தான் காட்சியளிக்கும்.
பூஜை அறை மற்றும் பெட்ரூம்:
பூஜை அறையில் உள்ள பொருட்களை வாரத்தில் ஒரு நாள் கழுவ வேண்டும். சாமி படங்களையும் தூசி இல்லாமல் துடைக்க வேண்டும்.
பெட்ரூமில் உள்ள செல்பை துடைக்க வேண்டும். செல்பில் உள்ள சாமி படங்களையும் துடைத்து விட வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்து வந்தால் உங்களது வீடு எதனை வருடமானாலும் புதிதாகவே இருக்கும்.
பாத்ரூம் கிளீன் செய்யும் முறை:
பாத்ரூமை தினமும் கிளீன் செய்ய வேண்டும். ஒருநாள் கிளீன் செய்யாமல் விட்டாலும் பாத்ரூம் மற்றும் வீடு இரண்டுமே நாறிவிடும். அப்படி உங்களால் தினமும் கிளீன் செய்யமுடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கிளீன் செய்திட வேண்டும்.
பாத்ரூம் வாசனையாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |