வாரத்தில் ஒரு நாள் 2 மணி நேரம் செலவிட்டால் வீடு புதிதாகவே இருக்கும்

Advertisement

House Maintaining Tips in Tamil

இன்றைய கால கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டை பராமரிப்பதற்கு நேரம் இல்லை. எல்லாருக்குமே வீடு அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். கட்டிய புதிதில் வீடு புதிதாக இருக்கிறது, நாளடைவில் வீடு பழையதாக மாறி விடுகிறது. நீங்கள் காசு கொடுத்து என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். ஆனால் உட்புறம் பலசாக தானே இருக்கும். அதனால் இந்த பதிவில் வீட்டை புதிதாக வைத்து கொள்வதற்கான டிப்ஸை தான் பார்க்க போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டை புதிதாக வைத்து கொள்வதற்கு டிப்ஸ்:

நீங்கள் வீட்டை புதிதாக வைத்து கொள்வதற்கு வாரத்தில் ஒரு நாள் இதில் கூறியுள்ளதை பின்பற்றினாலே போதுமானது.

ஒட்டடை அடிக்க வேண்டும்:

வீட்டை புதிதாக வைத்து கொள்வதற்கு டிப்ஸ்

உங்கள் வீடு என்ன வீடாக இருந்தாலும் ஒட்டடை அடிக்க வேண்டும், பிறகு வீட்டை முழுவதும் சுத்தமாக கூட்ட வேண்டும்.

கப்போர்டு சுத்தம் செய்ய வேண்டும்:

வீட்டில் உள்ள கப்போர்டை சுத்தம் செய்ய வேண்டும், அதில் உள்ள தேவையில்லாத பொருட்களை எடுத்து விட்டு புதிதாக பேப்பர் போட வேண்டும்.

கிச்சனில் உள்ள கபோர்டாயும் சுத்தம் செய்ய வேண்டும், அடுப்பு மேடை, மற்றும் கேஸ் பர்னர் போன்றவற்றை கழுவ வேண்டும்.

10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற இதை மட்டும் 10 நிமிடம் செய்தால் போதும்.

பூஜை பொருட்கள்:

பூஜை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். அதன் பிறகு சாமி போட்டோக்களை சுத்தமான துணியை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி, கடிகாரம் மற்றும் வேறு ஏதேனும் போட்டோக்கள் வைத்திருந்தால் அவற்றை சுத்தமான துணியை பயன்படுத்தி துடைத்து விட்டு பிறகு ஈர துணியை பயன்படுத்தி ஒரு முறை துடைக்க வேண்டும். அதன் பிறகு காய்ந்த துணியை பயன்படுத்தி ஒரு முறை துடைக்க வேண்டும்.

பாத்ரூம் சுத்தம் செய்ய: 

வீட்டை புதிதாக வைத்து கொள்வதற்கு டிப்ஸ்

ஒரு கப்பில் தண்ணீர் ஊற்றி அதில் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு  சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு வார்க்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை விட்டு கழுவ வேண்டும்.

மாப் போட வேண்டும்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் வீடு துடைக்க பயன்படுத்தும் லீகுய்டு வைத்திருந்தால் அதனை ஊற்றி கொள்ளவும். இல்லையென்றால் நீங்கள் தலை தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஷாம்பை கலந்து கொள்ளவும்.

இதனை பயன்படுத்தி வீடு முழுவதும் மாப் போடவும், அதன் பிறகு நல்ல தண்ணீரை பயன்படுத்தி ஒரு முறை துடைக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் வாரத்தில் ஒரு நாள் செய்து உங்க வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement