House Maintenance Ideas in Tamil
வீட்டை சுத்தம் செய்வது கஷ்டமான வேலையாக இருக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் வரும் விருந்தாளிகள் என்ன வீடு இவ்வளவு அழுக்கா இருக்கிறது. வீடு கட்டி எவ்வளவு நாள் ஆகிறது என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். இந்த மாதிரி கேட்டவர்களே என்ன செய்கிறீர்கள் வீடு புதிதாகவே இருக்கிறது என்று கேட்பதற்கு இந்த பதிவில் கூறியுள்ளது போல் ட்ரை பண்ணி பாருங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வாரத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியவை:
ஒட்டடை அடிக்கவும்:
முதலில் வீட்டில் இருக்கும் ஹால் மற்றும் ரூம் போன்றவற்றை ஒட்டடை அடிக்கவும். சுவற்றின் மூளையையும் ஒட்டடை அடித்து கொள்ளவும்.
Fan:
வாரத்தில் ஒரு நாள் வீட்டில் உள்ள Fan அனைத்தையும் காட்டன் துணியை வைத்து முதலில் துடைக்கவும். அதன் பிறகு தண்ணீரை தொட்டு ஒரு முறை துடைக்கவும்.
ஜன்னல்:
வீட்டில் உள்ள ஜன்னல்களை ஒட்டடை குச்சியால் ஒட்டடை அடித்து விட்டு, பிறகு காட்டன் துணியால் ஜன்னலை துடைக்க வேண்டும்.
ஹால் மற்றும் ரூம் போன்றவற்றில் இருக்கும் கதவுகளையும் அழுக்கு இல்லாமல் துடைக்கவும்.
படம் மற்றும் கண்ணாடி:
சாமி படங்கள் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவற்றை காட்டன் துணியை பயன்படுத்தி அழுக்கு இல்லாமல் துடைக்கவும்.
கண்ணாடியில் மேல் விபூதியை லேசாக தூவி ஈர துணியை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று மாறிவிடும்.
கிச்சன் எப்போதும் சுத்தமாக இருக்க இந்த குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க
வீட்டை பெருக்கவும்:
வீடு முழுவதும் தினமும் காலை மற்றும் மாலை என்று இரு வேலைகளும் பெருக்க வேண்டும்.
கழுவும் முறை:
சிமெண்ட் தரையாக இருந்தால் ஒரு பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி அதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரை சேர்த்து கலந்து வீடு முழுவதும் தெளித்து அதனை வார்கோல் பயன்படுத்தி தேய்த்து கொள்ளவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி விடவும்.
டைல்ஸ் தரையாக இருந்தால் ஒரு பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றி அதில் ஷாம்பு சேர்த்து கலந்து விடவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி மாப் போட்டு விட்டு மறுபடியும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி ஒரு முறை மாப் போட்டால் பளிச்சென்று ஆகிவிடும்.
பாத்ரூம்:
பாத்ரூமை தினமும் சுத்தம் செய்தால் தான் பளிச்சென்று இருக்கும். ஆனால் வாரத்தில் ஒரு நாள் சுவற்றில் உள்ள ஒட்டடை அடித்து விட்டு சுவர் மற்றும் தரை அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள கோலமாவை சுவர் மற்றும் தரையில் தெளித்து வாற்கோலை பயன்படுத்தி தேய்த்தாலே பளிச்சென்று மாறிவிடும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் வாரத்தில் ஒரு நாள் வாருங்கள் வீடு புதிதாகவே இருக்கும்.
கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |