ஈ தொல்லை நீங்க | House Rid Flies Control Home Remedies in Tamil
வீட்டில் மட்டுமில்லை பல இடங்களில் ஈக்கள் மொய்த்து கொண்டேயிருக்கும். அதனை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும். வீட்டில் எந்த உணவாக இருந்தாலும் அதில் ஈக்கள் மொய்த்து கொண்டே இருக்கும். ஈ மொய்த்த உணவுகளை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். ஈ தொல்லை அதிகமாக இருக்கிறது என்று கவலை வேண்டாம். இந்த பதிவில் ஈக்களை விரட்டுவதற்காக சோலா வீட்டு குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
ஈ விரட்டுவது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வினிகர் மற்றும் பாத்திர சோப்:
ஒரு பாத்திரத்தில் வினிகர் சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் சோப் அல்லது liquid எதுவாக இருந்தாலும் ஒன்றாக கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். மூடியில் ஈக்கள் நுழைகின்ற அளவிற்கு ஓட்டைகளை இட்டு மூடி வைக்கவும். வினிகர் வாசத்திற்கு ஓட்டையில் ஈக்கள் விழுந்து விடும்.
கொசுக்களை விரட்ட வீட்டிலேயே இயற்கை மருந்து செய்வது எப்படி..?
மிளகு:
ஒரு 20 மிளகு எடுத்து தூளாக அரைத்து கொள்ளவும். மிளகு தூளை தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளிக்கவும்.
துளசி:
1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் 1 கப் துளசி இலையை சேர்த்து கொதிக்க விடவும். இலைகளில் உள்ள சாயம் தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க விடவும். பிறகு இந்த தேனீரை ஈக்கள் எங்கு அதிகமாக மொய்க்குமோ அங்கெல்லாம் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் மற்றும் உப்பு:
ஒரு கிண்ணத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தயிரை வீடு முழுவதும் தெளித்து விடவும்.
ஈக்கள் வராமல் தடுக்கும் முறை:
வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் சரியாக மூட வேண்டும்.
குப்பையை கீழே கொட்டாமல் குப்பை தொட்டியை பயன்படுத்தி அதில் போட வேண்டும்.
உணவுகளை கற்று போகாத பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
வீட்டின் பக்கத்தில் புல்கள் பட்டு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வீட்டின் பக்கத்தில் விலங்குகளின் மலம் இருந்தால் அகற்றி விடவும்.
உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |