உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில
வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க
அனைவருக்குமே வீட்டு நன்கு சுத்தமாகவும், நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதிலும் உறவுக்காரர்கள் வரும்போது நம் வீடு வாசனையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்று பலர் நிறைய பணத்தை செலவழிப்பதுண்டு. குறிப்பாக வீட்டில் நல்ல மணம் வர வேண்டுமென்று, பல நறுமணப் பொருட்களை வாங்கி, வீட்டில் பயன்படுத்துவோம். இருப்பினும் அந்த நறுமண பொருட்கள் எல்லாம் 1 அல்லது 2 மணிநேரம் மட்டும் இருக்குமே தவிர, நிரந்தரமாக இருக்காது. அத்தகைய பொருட்களால் பண செலவும் அதிகரிக்கும். ஆகவே வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், அதிக பணம் செலவழித்து கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதான முறையில் நறுமணத்துடன் வைத்துக் கொள்ளலாம். எப்படி இயற்கை பொருட்களை கொண்டு வீட்டை நறுமணத்துடன் வைத்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டை எப்போதும் வாசனையாக வைத்துக்கொள்ள:
எலுமிச்சை சாறு:
வீட்டில் ஏற்படும் ஈரப்பத நாற்றத்தை எலுமிச்சை சாறு உறிஞ்சிவிடும். இதனால் ஓரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை சிறிதாக வெட்டி வீட்டில் ஈரப்பதம் காணப்படும் பகுதியில் வைப்பதால் அந்த நாற்றம் குறையும்.
காபி தூள்:
காபி தூள் வாசனை பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த வாசனையாக இருக்கும். அதனால் உங்கள் ஹால் பகுதியில் அல்லது வீட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் பாத்திரத்தில் காபி தூள் வைப்பதன் மூலம் அதன் வாசனை வீடு முழுவதும் பரவும். வீட்டிற்கு ஒரு நல்ல மணத்தை வழங்கும்.
இனி கடைக்கு சென்று ஹோம் ஸ்ப்ரே வாங்க தேவையில்லை… எலும்பிச்சை மட்டும் போதும்..
வினிகர்:
வினிகரின் வாசனை சிலருக்கு பிடிக்காததாக இருக்கலாம், ஆனால் சமையலால் ஏற்பட்ட நாற்றம் மற்றும் சிகரெட் புகை நாற்றங்களை வினிகர் குறைக்கும். அதனால் வினிகரை சில துளிகள் வீட்டில் தெளித்துவிடலாம் இதனால் நாற்றம் குறையும்.
துளசி:
வீட்டின் மையத்தில் அல்லது ஜன்னல்களில் சிறு துளசி செடிகளை வளர்ப்பதால் உங்கள் வீட்டில் துர்நாற்றம் இருக்காது. துளசி செடி சிறந்த கிருமிநாசியாகவும் நல்ல வாசனை அழிப்பதாகவும் இருக்கும்.
வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |