இந்த வீட்டு குறிப்புகளை தினமும் பின்பற்றுங்கள்…! ஈசியாக இருக்கும்..!

house useful tips in tamil

வீட்டு தூய்மையாக்க

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தினமும் ஒவ்வொரு வகையான வீட்டு டிப்ஸ் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம் அதை அனைத்தையும் அழகாக பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் இன்று வீட்டிருக்கு அவசியம் தேவைப்படும் குறிப்புக்களை தெரிந்துகொள்ள போகிறோம்..! வாங்க அது என்ன மாதிரியான டிப்ஸ் என்று தெரிந்துகொள்வோம்..!

டிப்ஸ்  -1

சாதி முல்லை

முதலில் சாமிக்கோ அல்லது உங்களுக்கோ பூ வாங்கினால் அதனை வாங்கிய உடன் காட்டாமல் பிரிட்ஜியில் வைத்துவிடுவீர்கள் அப்படி செய்தால் அதன் பின் அது மலர்ந்து விடும்  சிலநேரங்களில் அழுகிவிடும் அதனால் வாங்கிய உடன் கட்டமுடியவில்லை என்றால் உடனே ஒரு காற்று செல்லாத பாக்சில் போட்டு வைக்கவும். அதேபோல் அதனை திறந்து வைக்க கூடாது. அப்படி திறந்துவைத்தால் மற்ற பொருட்கள் அனைத்துமே பூ வடை வரும். சிலர் சாதி மல்லி, முல்லை பூ வாங்கினால் பிரீஜரில் வைத்துவிடுவார்கள் பின் அந்த பூவின் நிறம் மாறிவிடும். ஆக அந்த பூவின் நிறம் மாறக்கூடாது என்றால் பூவில் சிறிய அளவு கூட தண்ணீர் இல்லாமல் ஒரு பேப்பரில் அல்லது டீசு பேப்பரில் சுரிட்டி வைத்தால் பூவின் நிறம் மாறாது.

டிப்ஸ்  -2

 house useful tips in tamil

நம்முடைய அலட்சியத்தின் காரணமாக துணிகளில் கரை பட்டுவிடும். அதனை நீக்குவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு துணிகளை துவைத்தால் அது நீங்காது அதனால் கரை பட்ட இடத்தில் எலுமிச்சை சாற்றை சிறிது ஊற்றி துவைத்தால் கரை நீங்கிவிடும்.

டிப்ஸ்  -3

துணிகளை துவைக்கும் நேரமே அதிகமாக இருக்கும், அதிலும் இந்த வெள்ளை நிற துணிகளை துவைப்பதற்கு அதிகம் நேரம் எடுத்துக்கொள்வோம். அதனால் இனி வெள்ளை நிற துணிகள் துவைத்தால் துணிங்களை ஊற வைக்கும்போதே அல்லது துவைக்கும்போதே சிறிதளவு உப்பு சேர்த்து துவைத்தால் வெள்ளை நிறம் மாறும்.

டிப்ஸ்  -4

 house useful tips in tamil

பெண்கள் சமைப்பதற்கு கஷ்டப்படுவதற்கு முக்கிய கரணம் இந்த பூண்டு வெங்காயம் தான் அதனை உரிக்க அவ்வளவு கஷ்டப்படுவார்கள். இனி அதை பற்றி நினைத்து கவலை படாமல் வெங்காயம் பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் போட்டு ஊறவைத்து பிறகு உரித்தால் விரைவில் உரித்துவிடலாம்.

டிப்ஸ்  -5

இட்லி தோசை மாவு அரைத்தால்

இட்லி தோசை மாவு அரைத்தால் இனி அதில் இதை சேர்க்க மறக்காதீர்கள். மாவு அரைக்கும் போது அதில் வெண்டைக்காய் சேர்த்து அரைக்கலாம். அப்படி அரைக்கும் போது மாவு பஞ்சு போன்று மிருதுவான பதத்தில் இருக்கும்.

டிப்ஸ்  -6

சப்பாத்தி மாவு பிசைந்து

சப்பாத்தி மாவு பிசைந்து அதனை 1/2 மணி நேரத்திற்க்கு மேல் ஊறவிடவும். அதன் பின் சப்பாத்தி சுட்டு பாருங்கள் சப்பாத்தி நன்றாக இருக்கும். அதேபோல் மாவு பிசையும் போது அதில் வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பார்த்தால் மிருதுவாக இருக்கும்.

டிப்ஸ்  -7

சீடை செய்வது

விழாக்காலங்களில் வீட்டில் சீடை செய்வது வழக்கம் அது சிலர் வீட்டில் உடைந்து விடும் உடையாமல் இருக்க உருட்டும் போது அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்தால் சீடை உடையாமல் வரும்.

டிப்ஸ்  -8

கதவு, ஜன்னல்

கதவு, ஜன்னல் போன்றவற்றை துடைக்கும் போது சமையல் சோடாவுடன், எலுமிச்சை சாறு கலந்து ஈர துணியில் நனைத்து துடைத்து பாருங்கள் வீடே பளிச்சுனு இருக்கும் கிருமிகள் அண்டாது.

2 நிமிடத்தில் புளித்த மாவை புதிய மாவு போல் ஆக்கலாம்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com