ஈக்களை விரட்ட
பொதுவாக வீட்டை என்ன தான் சுத்தமாக வைத்திருந்தாலும் ஈக்களை மட்டும் வந்து கொண்டே இருக்கும். ஈக்கள் வருவது மட்டுமில்லாமல் உணவுகளில் மொய்த்து கொண்டே இருக்கும். இதனை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதோடு ஈக்கள் மொய்த்த உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஈக்கள் வராமல் இருப்பதற்கு என்ன செய்வது என்று கேட்டால் முதலில் ஈக்களிடம் Address கொடுக்காமல் இருக்க வேண்டும். இருக்கிற வேதனையில் நீங்க வேற மொக்க காமெடி பண்றிங்களா என்று திட்டாதீர்கள். சரி வாங்க இயற்கையான முறையில் ஈக்களை விரட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஈக்களை விரட்ட துளசி:
இயற்கையாகவே துளசியானது ஈக்களை விரட்ட கூடிய தாவரமாகும். அதனால் வீட்டின் உள்பகுதியில் வளர்க்கலாம், இல்லையென்றால் சமையலறை அல்லது ஈக்கள் ஏகு அதிகமாக மொய்க்குமோ அந்த இடத்தில் துளசி இலைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விட வேண்டும். இதன் மூலம் ஈக்கள் வராது.
இயற்கையான எண்ணெய்:
ஈக்களுக்கு வாசனை உள்ள எந்த பொருளும் பிடிக்காது, ஈக்களுக்கு மட்டுமில்லை எந்த பூச்சிகளுக்கு வாசனை மிகுந்த பொருட்கள் பிடிக்காது. அதனால் நெனெகல் வாசனை மிகுந்த எண்ணெய்களை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரேயாக பயன்படுத்தலாம். அதில் மிளகு கீரை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் போன்றவை ஈக்களை விரட்டுவதற்கு சிறத்தவையாக இருக்கிறது.
1 கப் தண்ணீர் எடுத்து கொள்ளவும், அதில் மேல் கூறப்பட்டுள்ள எண்ணெய்களில் 100 மிலி கலந்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை ஜன்னல், கதவு, சமையலறை மற்றும் ஈக்கள் எங்கு அதிகமாக வருமோ அந்த இடத்தில் எல்லாம் தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இந்த வாசனைகளுக்கு ஈக்கள் மட்டுமில்லை எந்த பூச்சிகளும் வராது.
வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இந்த எண்ணெயில 2 சொட்டு ஊத்துங்க போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |