How Many Times Hair Dye Use in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இது அனைவருக்கும் பயன் அளிக்கும் என்று எப்படி சொல்கிறேன் என்றால் இப்போது அனைவருக்கும் இருக்கும் பிரச்சனையில் இதுவும் ஒன்று? அது நரை முடி, இந்த நரை முடி இளம் வயது முதல் வயது அதிகம் உள்ளவர்கள் வரை அனைவருக்குமே உள்ளது.
எனவே முடி கருமையாக இருக்க டை அடிக்கிறார்கள். ஆனால் அடித்து சில நாட்களில் முடியானது நிறம் மறைந்து விடுகிறது. உடனே கலர் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படி அடிக்கடி டை அடிப்பது நல்லதா இல்லை கெட்டதா? வாங்க தெரிந்துகொள்ளலாம்..!
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ‘டை’ அடிக்க வேண்டும் தெரியுமா?
♦ நாம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த கூடாது. அதேபோல் மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் அதிலும் நச்சுத்தன்மை இருக்கும்.
அப்படி மாதத்திற்கு 1 முறை தலைக்கு டை அடித்தால் அது நன்மை ஆகும். அதுவும் அவர் அவர் உடல் அமைப்பில் உள்ளது. முக்கியமாக சொல்லப்போனால் தலைக்கு டை அடித்துவிட்டு சிலர் விளையாடுவார்கள், சிலர் வேலைபார்ப்பார்கள் அப்படி வேலைபார்க்கும் பட்சத்தில் எப்படி இருந்தாலும் 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அப்போது அவர்கள் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். அதாவது 1 லிட்டர் முதல் 1.1/2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.♦ அதற்கும் இதற்கும் என்ன உள்ளது என்று நினைப்பீர்கள். அது ஏன் என்றால் நாம் டை அடிக்கும் போது அதில் உள்ள நச்சு தன்மையானது உடலில் சென்று விடும். அப்போது நிறைய விதமான பிரச்சனையை உடலில் ஏற்படும்.
♦ இப்படி அந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் நாம் சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் வழியாக உடலில் விட்டு வெளியே சென்று விடும்.
இயற்கையாகவே தலை டை வேண்டுமென்றால் 👉👉 ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் |
♦ அதேபோல் தலையை அலசி குளிக்கும் போது கண்கள், வாய் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்.
♦ அவ்வாறு அதிக நேரம் வைத்திருந்தால் டை தலையை விட்டு மறையாது என்று நினைக்க வேண்டாம். டையை அதிக நேரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
♦ சிலர் யோசிப்பார்கள் நான் நல்ல தரம் வாய்ந்த ஹேர் டை பயன்படுத்துகிறேன் ஆனால் அது எனக்கு கொஞ்ச நாள் வரை தலைமுடியில் உள்ளது அதன் பிறகு எப்போதும் போல் நரையாகிறது என்று அதற்கு காரணம்.
♦ தலை முடியாது எண்ணெய் பிசுபிசுப்பு போன்று உள்ளது அதில் நாம் என்ன டை அடித்தாலும் தலையில் நிற்காது. அதாவது நமது சருமத்தில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கும். அந்த எண்ணெய் தான் சுரக்கும் போது நம் முடியில் வேர் வழியில் தலைக்கு செல்லும் அதனால் தான் தலை குளித்து இரண்டாவது நாள் தலையானது பிசு பிசுப்பாக இருக்கும்.
அதனால் தான் தலையில் டை அடித்தாலும் அது கொஞ்ச நாட்கள் தான் இருக்கும்.
வீட்டில் செய்து பாருங்கள் 👉👉 5 நிமிடத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நரை முடியை கருப்பாக மாற்றலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |