சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்

How to Adjust Salt in Food in Tamil

சமைத்த உணவில் உப்பு அதிகமானால் என்ன செய்வது? | How to Adjust Salt in Food in Tamil

சமைக்கும்போது சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு இவை இரண்டையும் நாம் சரியான அளவில் போட வேண்டும். இல்லை என்றால் சமைந்த உணவின் சுவை கெட்டு போய்விடும். அப்படி அவற்றில் மசாலா அதிகம் ஆனால் கூட ஏதோ அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டுவிடுவோம். ஆனால் உப்பு அதிகமானால் அந்த உணவை வாயில் வைக்கவே முடியாது. குப்பையில் தான் தூக்கிப்போட வேண்டியதாக இருக்கும். இனி அந்த கவலை வேண்டாம் சமையலில் உப்பு அதிகமானால் இங்கு கூறப்பட்டிருக்கும் எதாவது ஒரு டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும். உணவில் அதிகம் உள்ள உப்பை குறைத்துவிடும்.

சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்..

உப்பு அதிகமானால் என்ன செய்வது | How to Balance Salt in Food

How to Adjust Salt in Food in Tamil Tips: 1 (குழம்பில் உப்பு அதிகமானால்)

உருளைக்கிழங்கு

குழம்பில் அதிகம் உப்பு சேர்த்துவிட்டால் அந்த குழம்பு கொதிக்கும்போது ஒரு உருளைக்கிழங்கை கட் செய்து அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உருளைக்கிழங்கை 10 நிமிடம் மட்டும் வேகவைத்தால் போதும் பிறகு அந்த குழம்பில் இருந்து உருளை கிழங்கை எடுத்துவிடலாம். இப்படி செய்வதன் மூலம் குழம்பில் உள்ள உப்பு குறைந்துவிடும்.

Tips: 2

தக்காளி

உருளைக்கிழங்கு இல்லாத பட்சத்தில் இரண்டு தக்காளியை பொடிதாக கட் செய்து குழம்புடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவியக்கலாம். இப்படி செய்வதன் மூலம் குழம்பில் உள்ள உப்பு குறைந்துவிடும், அதேபோல் குழம்பின் சுவையும் அதிகமாகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் மாப் போடும் போது இந்த ஒரு பொருளை கலந்தால் போதும்

How to Adjust Salt in Food in Tamil Tips: 3

சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மீன் குழம்பு, கறிக்குழம்பு, மற்ற குழம்புகளில் உப்பு அதிகமாகிவிட்டது என்றால் கொஞ்சம் தேங்காய் பால் அறைந்து ஊற்றலாம். இப்படி செய்வதன் மூலம் அவற்றில் உள்ள உப்பு குறைந்துவிடும்.

குழம்பில் உப்பு அதிகமானால் – Tips: 4

குழம்பில் உப்பு அதிகமானால் இந்த சுலபமான டிப்ஸையும் பாலோ பண்ணலாம் அதாவது, குழம்பில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடலாம். இப்படி செய்தாலும் குழம்பில் உள்ள உப்பு குறைந்துவிடும்.

குருமாவில் உப்பு அதிகமானால் – How to Adjust Salt in Food in Tamil Tips: 5

குருமா

குருமா வகைகளில் உப்பு அதிகமானால் கடலை மாவு ஒரு ஸ்பூன் அல்லது சோளமாவு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். இதனை 1/2 கப் பாலில் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்துவிடுங்கள். பிறகு அதனை குருமாவில் ஊற்றி 2 முதல் 5 நிமிடம் கொதிக்கவைத்தால் குருமாவில் உள்ள உப்பு குறைந்துவிடும். அல்லது கிரீம் சேர்க்கலாம், அல்லது கெட்டி தயிர் சேர்த்து கொதிக்கவிடலாம்.

பொரியலில் உப்பு அதிகமானால் – Tips: 6

பொரியல்

பொரியல் வகைகளில் உப்பு அதிகம் ஆனால் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி அதனை எண்ணெய் வதக்கி பொரியலில் சேர்த்து கிளறிவிடலாம். அல்லது தேங்காய் துருவி அதனுடன் சேர்த்து கிளறிவிடலாம். இப்படி செய்தால் அவற்றில் உள்ள உப்பு குறைந்துவிடும். இவை இரண்டு இல்லை என்றால் 1/2 டம்ளர் தண்ணீர் ஊட்டி பொரியலை 2 நிமிடம் கொதிக்கவைக்கவும். பிறகு அவற்றில் இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டிவிட்டு மீண்டும் பொரியலை சுருள வதக்கிக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் அவற்றில் உள்ள உப்பு குறைந்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!

Tips: 7

வறுவல் வகைகளில் உப்பு அதிகமானால் ஒரு ஸ்பூன் அரிசி மாவை வருவாயில் சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கவும். இப்படி செய்தால் அவற்றில் உள்ள உப்பு சரியாகிவிடும்.

Tips: 8

பிரியாணி அல்லது வெரைட்டி ரைஸில் உப்பு அதிகமானால் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி அதனை எண்ணெயில் வதக்கி அந்த ரைஸில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

இட்லி தோசை மாவில் உப்பு அதிகமானால் – Tips: 9

இட்லி மாவில் உப்பு அதிகமானால் 1/2 கப் ரவையை வறுத்து அதனை பாலில் ஊறவைத்து பிறகு அதனை மாவில் சேர்த்து கலந்துவிட்டால் போதும். அதில் இருக்கும் உப்பு குறைந்துவிடும்.

ரசத்தில் உப்பு அதிகமானால் – Tips: 10

ரசத்தில் இருக்கும் உப்பு சரியாக சிறிதளவு  புளியைக்கரைத்து ஊற்றி, சிறிதளவு மிளகு சீரகம் இடித்து சேர்த்தால் அவற்றில் இருக்கும் உப்பு குறைந்துவிடும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips