வெறும் எலுமிச்சை பழம் மட்டும் போதும் வீட்டில் பூச்சிகள் எதுவும் வராமல் இருக்க..!

how to avoid cockroach in kitchen in tamil

How to Avoid Cockroach in Kitchen

பெண்கள் எல்லோரும் வீட்டில் பார்க்கும் வேலையை விட பெரிய வேலை என்றால் அது வீட்டை பராமரிப்பது தான். ஏனென்றால் வீட்டை பெருக்குவது, துணி துவைப்பது மற்றும் பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை விட வீட்டை பூச்சிகள் எதுவும் வராமல் பார்த்து கொள்வது தான் மிகப்பெரிய கஷ்டம். அதிலும் குறிப்பாக கரப்பான் பூச்சி என்றால் அந்த இடத்தை முழுவதுமாக மாற்றி விட்டு தான் சென்று விடும். அதனால் தான் வெறும் எலுமிச்சை பழத்தை மட்டும் வைத்து உங்களுடைய வீட்டில் கரப்பான் பூச்சிகள் எதுவும் வராமல் தடுக்க என்ன செய்வது என்று தெறிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரப்பான் பூச்சி வராமல் இருக்க என்ன செய்வது:

உங்களுடைய வீட்டில் கரப்பான் பூச்சி என்பதை கண்ணில் கூட பார்க்கக்கூடாது முதல் அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை வைத்து ஒரு Liquid தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை பழம்- 3
  2. பேக்கிங் சோடா- 1 ஸ்பூன் 
  3. பாத்திரம் கழுவும் ஜெல்- 1 ஸ்பூன் 
  4. கற்பூரம்- 5

இதையும் படியுங்கள்⇒ என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!

How to Prevent Cockroaches in Kitchen:

how to prevent cockroaches in kitchen in tamil

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள எலுமிச்சை பழத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஜூஸ் போல அரைத்து அதனை ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அதனுடன் 5 கற்பூரத்தை நன்றாக பவுடர் போல செய்து எலுமிச்சை சாறுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

அடுத்து மூன்றாவதாக பேக்கிங் சோடா 1 ஸ்பூன் சேர்த்து ஒரு குச்சியால் நன்றாக 5 நிமிடம் வரை கலந்து வைத்து விடுங்கள்.( குறிப்பு: பேக்கிங் சோடா பயன்படுத்தும் போது கையினை உபயோகப்படுத்த கூடாது)

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள Liquid உடன் பாத்திரம் கழுவும் ஜெல் 1 ஸ்பூன் மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக 10 நிமிடம் மீண்டும் கலந்து கொள்ள வேண்டும். இப்போது கரப்பான் பூச்சியினை வராமல் தடுப்பதற்கு Liquid தயார் ஆகிவிட்டது.

ஸ்டேப்- 5

உங்களுடைய வீட்டில் கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தயார் செய்து வைத்துள்ள Liquid-ஐ இரவு தூங்க செல்வதற்கு முன்பாக தெளித்து விட்டு அப்படியே விட்டு விட்டு. மறுநாள் காலையில் எழுந்து அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் இனி உங்களுடைய வீட்டு பக்கம் கரப்பான் பூச்சி எட்டி கூட பார்க்காது.

இதையும் படியுங்கள்⇒ உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil